மயிலாடுதுறை, பிப். 19- மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில 20வது மாநாடு விளக்கப் பொதுக் கூட்டம் மயிலாடுதுறையில் வட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் தலைமையில் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான டி.கே.ரங்கராஜன் கலந்துகொண்டு மாநாட்டை விளக்கிச் சிறப்புரையாற் றினார். வட்டக்குழு உறுப் பினர்கள் மணி, கோவிந்த சாமி, மாவட்டக்குழு உறுப் பினர் ஆர்.இராமானுஜம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.