கிருஷ்ணகிரி மாவட்டத் தில் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சமூக நலத்துறையின் முக்கிய பணியிடங்களில் உரிய அலுவ லர்கள் இல்லாததால் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதி லும் தாமதம் ஏற்பட்டு வருகி றது. கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் மாவட்ட ஆட்சியர், கட்டிடத்தில் உள் ளது. குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள், சிறார் திருமணம் மற்றும் வன்கொடு மைகளுக்கு உள்ளாகும் குழந் தைகள் பாதுகாப்பு, ஆதரவற்ற சிறார்களுக்கு கல்வி, உணவு, உடை மற்றும் இருப்பிட வசதி அளித்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் திருமண உதவித் திட்டங்கள், தையல் எந் திரங்கள் வழங்குதல், அரசு சேவை இல்லங்கள் இத்துறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன. தனியார் நடத்தும் சிறார் இல்லங்களை கண்காணிக்கும் பொறுப்பும் இத்துறைக்கு உள் ளது. குடும்ப வன்முறைக்கு உள் ளான நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் புகார்கள் கிருஷ்ண கிரி மாவட்டத்தில் நடவடிக்கை யில் உள்ளன. இவற்றை கவனிக் கவும் குற்றமிழைத்தோருக்கு தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் பெற் றுத்தரவும் பாதுகாப்பு அலுவ லர் பணியிடம் உள்ளது. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்-2005 ன் கீழ் உருவாக் கப்பட்ட இப்பணியிடம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காலி யாக உள்ளது. இப்பணியை கூடு தல் பொறுப்பாக செய்து வந்த வழிகாட்டி செயல் அலுவலரும் சென்னையிலுள்ள இயக்குன ரகத்திற்கு சென்றுவிட்டார். மாவட்ட சமூக நல அலுவலராக பணியாற்றியவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். அவரது பொறுப்பை தற்போது வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலு வலர், கூடுதல் பொறுப்பாக ஏற் றுள்ளார். அலுவலக உதவியா ளர், பதிவறை எழுத்தர், தட்டச் சர் பணியிடங்களும் காலியாக உள்ளன. கணினிகள் உள்ளன. இயக்கு பவர் இல்லை. வெள்ளியன்று (பிப்.17) சமூக நலத்துறை அலுவ லகத்திற்கு வந்த இளைஞர் ஒரு வர், குழந்தை விற்பனை குறித்த புகார் ஒன்றை கொடுத்தார். நடவடிக்கை எடுக்கும் அதிகா ரம் உள்ள மாவட்ட அலுவலர் கள் இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். இதை சொல்ல இந்த அலுவலகத்திற்கு 4 பேரா என்று திட்டிவிட்டு வெளியே றினார். இந்நிலையில் குடும்ப வன் முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் தினந்தோறும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத் திற்கு வந்து கண்ணீர் சிந்தி விட்டு செல்கிறார்கள். கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத் துறை அலுவல கத்தில் பணியாற்றும் அலுவலர் ஒருவர் தனது மனைவியின் தலையில் குக்கரை தூக்கி அடித் தது தொடர்பாக புகார் கொடுத் துள்ளார். அன்றாட குடும்ப செலவுக்கு பணம் இல்லாமலும் இரண்டு பெண் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை தொடர முடி யுமா என்கிற பதற்றத்தோடும் பாதிக்கப்பட்ட பெண் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார். இதனிடையே அரசு குடியி ருப்பிலிருந்து காலி செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு, மனை வியை மீண்டும் அடித்து வெளி யேற்ற முயன்றுள்ளார். பிழைப் புத் தொகை வழங்க உத்தரவா கியும் கிடைக்காத நிலையில், என்ன செய்வது என்று வழி தெரி யாமல் தவிக்கிறார் பாதிக்கப்பட்ட அந்த பெண். நீதிமன்றங்களில் நடந்து வரும் குடும்ப வன்முறை வழக்குகளிலும் பதிலளிக்கும் அலுவலர் இல்லாததால் கால தாமதம் அல்லது குற்றம் சாட் டப்பட்டோருக்கு சாதகமாக வழக்குகள் முடியும் நிலை ஏற்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் மூலம் 40 ஆதரவற்ற சிறுவர் இல்லங்கள் செயல் பட்டு வருகின்றன. அண்மையில் ஓசூர் அருகே மூக்கண்டப் பள்ளியில் அன்னை சந்தியா ஆதரவற்ற சிறார் இல்லம் மூடப் பட்டது. இதை நடத்தி வந்த சிறைக் காவலர் தியாகராஜனும் அவரது மனைவியும் கைது செய் யப்பட்டனர். 14 வயதுக்குட் பட்ட சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வும் ஒன்பதாம் வகுப்பு மாணவி அம்பிகா பாலியல் வன்கொடு மைகளுக்கு உள்ளாக்கப்பட்ட தாகவும் தியாகராஜன் மீது புகார் எழுந்தது. சிறார் திருமணத்திற்கு எதிரான சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. உரிய அலுவலர்கள் இல்லாததால் இப்பணிகளும் பாதிக்கப்பட் டுள்ளதாக கூறுகிறார் மாதர் சங்க நிர்வாகி ஜெயந்தி. அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட்டுக்கு பிறகே இந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. அனைத்து சிறுவர் இல்லங்களி லும் கூடுதல் கண்காணிப்பு மேற் கொள்ள வலியுறுத்தி மாதர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர். ஆனால் இதை செய்ய வேண்டிய சமூக நலத்துறையில் அதிகாரிகள் இல்லை என்பது சிறார்களின் பாதுகாப்பை அரசு உதாசீனப்படுத்துவதாக உள்ளது என்கிறார் மாதர் சங்க மாவட் டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ் சலா மேரி. உடனடியாக சமூக நலத் துறையில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்பவும், பெண் கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தியும் அடுத்த மாதத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக ஆஞ்சலா மேரி தெரிவித்தார். -சி.முருகேசன்.

Leave A Reply

%d bloggers like this: