வழிபாட்டுக்குள்ள கட்டண முறையை அகற்றி கடவுள் முன்பு அனைவரும் சமம் என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் – விஎச்பி அமைப்பு கருத்து. ச.சா – கட்டண முறையப் பத்தி பேசுற நீங்க, சாதி ரீதியான கொடுமையப் பேச மாட்டேங்குறீங்களே…?? * * * பயங்கரவாதத் தடுப்பு மையத்தை அமைப்பது மாநிலங்கள் உரிமையைப் பறிப்பதல்ல – காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி. ச.சா – இதவிடப் பெரிய பறிப்பெல்லாம் செய்யுறத வெச்சு சொல்லிருப்பாரோ….?? * * * உத்தரப்பிரதேசத்தின் மோசமான நிலைக்கு எதிர்க்கட்சி அரசுகளே காரணம் – பிரதமர் மன்மோகன் சிங். ச.சா – இதே அளவுகோல ஒட்டுமொத்த தேசத்துக்கு வெச்சா, நிலைமை மோசமா இருக்குறதுக்கு நீங்கதான காரணம்…?? * * * 2014ல் நடக்கும் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பாஜக ஆட்சி வரும் – தமிழக பாஜக தலைவர் இல.கணேசன். ச.சா – உங்க பிறந்தநாளும், அதுவுமா மக்கள எதுக்கு பீதியடைய வெக்குறீங்க..?

Leave A Reply

%d bloggers like this: