நாகப்பட்டினம், பிப். 19 மாற்றம் தந்த மக்களுக்கு இந்த ஆட்சி ஏமாற்றம்தான் தந்திருக்கிறது என்று சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ் ணன் எம்எல்ஏ குற்றம் சாட் டினார். திருக்கடையூரில் நடந்த மாநில மாநாட்டு பிரச்சார, நிதியளிப்பு பொதுக்கூட் டத்தில் அவர் பேசியதாவது: வெண்மணித் தீயில் 44 தோழர்களை எரித்துச் சாம் பலாக்கிவிட்டால் கம்யூ னிஸ்ட் கட்சி அழிந்துவி டும் என்று ஆதிக்கவெறி பிடித்த நிலச்சுவான்தார்கள் நினைத்தார்கள். கம்யூ னிஸ்ட் கட்சி எழுச்சிபெற்று வளர்ந்ததே தவிர, எவராலும் அதை வீழ்த்திட முடியாது. கொள்ளைக்கூட்டக் குடும்பக் கட்சியாக திமுக மாறிவிட்டது. திமுகவின் இறுதி அத்தியாயம் இப் போது எழுதப்பட்டு வரு கிறது. அதன் ஆட்சியை அகற்றவே, அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தோம். ஆட் சிக்கு வந்ததும் அதிமுக வுக்கு ஆதிக்கத் திமிர் வந்து விட்டது. சசிகலா கும்பல் ஜெயலலிதாவோடு இருந்த வரை அடித்த கொள் ளைக்கு யார் பொறுப்பு? வாக்களித்து ‘மாற்றம் தந்த மக்களுக்கு விலைவாசி உயர்வு ஏற்றம்’ தந்தீர்கள். சங் கரன்கோவிலில் ஜெயித்து விட்டால், விலைவாசிகள் இன்னும் உயர்ந்துவிடும். திமுக ஆட்சியில் நடந்த ‘திருமங்கலம் பார்முலா’ தானே சங்கரன்கோவிலி லும் நடக்கவிருக்கிறது. சட்டமன்றத்தில் அதி முக அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் எழுந்து பேசினால், “அம்மா அம்மா அம்மா – நீங்கள்தான் எல்லாம். நாங் களெல்லாம் சும்மா சும்மா சும்மா” என்று துதிபாடி விட்டு உட்கார்ந்துவிடுகி றார்கள். ஆக, மாற்றம் தந்த மக்க ளுக்கு இந்த ஆட்சி ஏமாற் றம் தான் தந்திருக்கிறது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் ஒன் றை ஒன்று மீறி ஊழலை தான் வளர்த்திருக்கின்றன. தற் போது மக்கள் இந்த இரண்டு கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர். நாகையில் ஒரு மாற்றுப் பாதைக்கான மாநில மாநாடு நடைபெறுகிறது. உங்களுக்காக உழைக்க, ஏழை-எளிய மக்களை உயர்த்த – வழிகாட்ட உயரிய கொள்கைகளை வகுக்க வுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு. உற்சாகத்தோடு மாநாட்டுக்கு வாருங்கள். இவ்வாறு கே.பால கிருஷ் ணன் எம்எல்ஏ பேசி னார். வி.பாரதி ராஜா நன்றி கூறி னார்.

Leave A Reply

%d bloggers like this: