சங்கரன்கோவில், பிப். 19 – சங்கரன்கோவிலில் மார்ச் 18ம்தேதி இடைத்தேர்தல் நடை பெறும் எனவும், தேர்தல் நடத் தை விதிமுறைகள் உடனடி யாக அமலுக்கு வருவதாகவும் தேர் தல் ஆணையம் உத்தரவிட்டுள் ளது. இடைத்தேர்தல் தேதி அறி வித்த பின்னரும், தேர்தல் விதி அமல்படுத்தப்பட்ட பின்னரும் சங்கரன்கோவில் தொகுதிக்குட் பட்ட பல பகுதிகளில் இலவச கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகிய பொருட்களை போட்டி போட்டுக் கொண்டு ஆளும் கட்சி விநியோகம் செய்து வரு கிறது. தேர்தல் விதிமுறைப்படி அரசு சுவர்களில், நகர்ப்புறங்களி லும் சுவர் விளம்பரம் மற்றும் விளம்பரப்பலகை பொது இடங் களில் வைக்கக்கூடாது. அதை மீறி பல்வேறு இடங்களில் அதி முக விளம்பரங்களை அரசு சுவர்களில் செய்து வருகிறது. தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு வருகிறது. முதல்வர் பிரச்சாரத் திற்கு வரும் சாலைகள் அனைத் தும் புதிதாக போடப்பட்டு வரு கிறது. இலவச பொருள்கள் கொடுக்காத இடங்களில் இல வச பொருள்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஆளுங் கட்சி என்பதால் அரசு நிர் வாகத்தின் முழு ஒத்துழைப்பும் அதிமுகவிற்கு தேர்தல் விதி முறை அமல்படுத்தப்பட்ட பிற கும் இருந்து வருகிறது. ஆகவே ஆளுகின்ற கட்சிக்கு ஒரு நிலை மற்ற கட்சிகளுக்கு வேறுநிலை என்ற பாகுபாட்டை தேர்தல் ஆணையம் களைந்து முழுக் கட்டுப்பாட்டோடும் கண்ணி யத்துடனும் தேர்தலை ஜனநா யகப் பூர்வமாக நடத்திட வேண் டும் என்பதே மற்ற அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பு.

Leave A Reply