சேலம், பிப். 19- சேலம் சேகோ தலை மை அலுவலக பாரம் தூக் கும் தொழிலாளர்கள் நூற் றுக்கும் மேற்பட்டோர் கூலி உயர்வு கேட்டு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் பாமாங்கம் அருகே சேகோ சர்வ் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத் தில் விவசாயிகள் கொண்டு வரும் ஸ்டார்ச் போன்றவை ஏலம் விடப்படும். இவற் றினை ஏலம் எடுப்பதற்காக தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து ஸ்டார்ச் வியாபாரிகள் வரு வார்கள். இங்கு கொண்டு வரப்படும் ஸ்டார்ச் மூட் டைகளை ஏற்றி இறக்கும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேகோ சர்வ் நிர்வாகம் தொழி லாளர்களின் அடிப்படை தேவைகளை செய்து கொடுப்பதில்லை. பணியின் போது குடோனில் இறந்த அபிமன்னன், நமச்சிவாயம் ஆகிய இரண்டு தொழிலா ளர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் எந்த உதவி யும் பெற்றுத்தரவில்லை. தமிழக அரசு அறிவித் துள்ள குறைந்த பட்ச கூலி மற்றும் பஞ்சப்படி போன்ற வற்றை நிர்வாகம் செயல் படுத்தவில்லை. மேலும், விலைவாசிக்கு ஏற்றாற்போல் கூலியை நிர் வாகம் உயர்த்தித்தர வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேகோ சர்வ் தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு சுமைதூக்கும் தொழிலாளர் கள் சங்கத்தின் தலைமை யில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Leave A Reply