திருநெல்வேலி பிப் 19 – கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக நெல் லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு வல்லுநர் – போராட் டக் குழுவும் பேச்சுவார்த் தை நடந்தது . கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்த கரையில் போராட்டக்குழு வினர் கடந்த 6 மாதங்களாக பல்வேறு வடிவங்களில் அணுஉலையை மூடக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு 15 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவும் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும் இவர் கள் மத்திய அரசிடம் அணு உலையால் எந்த பாதிப்பும் கிடையாது; பாதுகாப்பா னது என்று அறிக்கைகளை சமர்ப்பித்தனர். இந்நிலையில் இந்த பிரச் சனைக்கு தீர்வு காண தமி ழக அரசு இனியன், அறிவு ஒளி, சீனிவாசன், விஜய ராக வன் என 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவை அமைத்தது. இந்த குழு நெல்லைக்கு சனிக்கிழமையன்று கூடங்குளம் அணுமின் மின் நிலையத்திற்கு வந்து பார் வையிட்டது. தொடர்ந்து இக்குழு அணுஉலை அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து ஞாயிற்றுகிழமை யன்று மாலை 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கூடங்குளம் அணு உலை தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது . பேச்சுவார்த்தையில் தமி ழக அரசு வல்லுநர் குழுவினரும் போராட்டக் குழு சார்பில் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் சிலரும், மாவட்ட நிர்வா கம் சார்பில் மாவட்ட ஆட் சியர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி. போலீஸ் எஸ்.பி விஜேந்திர பிதாரி, மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த் தை நடத்தினர் .

Leave A Reply

%d bloggers like this: