சென்னை, பிப். 19 – கூடங்குளம் மின் உற்பத்தியை தொடங்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த தமிழ்நாடு குறுந்தொழில் மற்றும் சிறுதொழில் நலச் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் வே.நித்தியானந் தம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 1 மணி நேரமும், மற்ற பகுதிகளில் 2 மணி நேரமும் மின்தடை அமலில் இருக்கும் என மின்வாரியம் அறிவித்திருந்தாலும் மாநிலம் முழுவதும் 8 முதல் 13 மணி நேரம் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளில் எந்த இயந்திரத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,கூடங்குளம் மின்உற்பத்தியை தொடங்க வலியுறுத்தி இச்சங்கத்தின் மூலம் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் 21-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை ஈக்காடுதாங்கல் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் முதன்மைச் சாலையில் தெருமுனைக் கூட்டம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: