கே.வைத்தியநாதன் உதவித்தலைவர், சிஐடியு தமிழ் மாநிலக்குழு. நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண் டுகள் உருண்டோடி விட்டன. இன்று வரை நாடுதழுவிய அளவில் ஒரே மாதிரி யான குறைந்தபட்ச ஊதியம், பஞ்சப்படி, தொழிற்கல்வி பயிலாத தொழிலாளர் களுக்கு வழங்கப்படவுமில்லை. சமூக பாதுகாப்பும் இல்லை. குறைந்தபட்ச ஊதியம் ரூ.10,000 நிர்ணயிக்கப்பட வேண் டும். அத்துடன் விலைவாசிப் புள்ளி உயர்வை ஈடுகட்டும் வகையில் வழங் கப்பட வேண்டும் என்பது பிப்ரவரி 28 நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் ஒரு கோரிக்கை யாக உள்ளது. 1948 முதல் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்க இன்று வரையில் நடைமுறையில் 15வது முக் கூட்டு தொழிலாளி மாநாட்டின் முடிவாக கீழ்க்கண்ட அளவு பின்பற்றப்பட்டு வரு கிறது. 3 பேர் கொண்ட யூனிட் ( 2பேர் + 2 குழந்தைகள்), 2700 கலோரி உணவுத்தேவை சராசரி குறைந்த பட்சம் 72 கஜம் வருடாந்திர துணி (குடும் பத்திற்கு) வீட்டு வாடகை ( அரசுத் தொழி லாளர் காலனி அளவில் வசிக்கும் இடம்) எரிபொருள், விளக்கு மற்றும் இதர செலவினங்களுக்கு 20 சதவீதம் என்றும், இதைத்தவிர 1992ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், ரெப்டகாஸ் + கம்பெனி/ மற்றும் தொழிலாளர்களுக்கான தீர்ப்பின்படி கூறப்பட்டுள்ள 25 சதமானம் மருத் துவம், முதுமை, பண்டிகைக்காகவும் இணைக் கப்படவேண் டும். இது தவிர பஞ்சப்படி, 1988ம் ஆண்டு தொழிலாளர் அமைச்சர் மாநாட்டு முடிவாக விலைவாசியை ஈடுகட்ட வழங்குவது. ஆண்டு சரா சரியை ஈடுகட்ட ஒவ்வொரு ஆண்டும் பஞ்சப்படி உயர்வு சராசரி உயர்வாக அளிக்கப்பட வேண்டும். இத்தகைய முறையில் கணக்கிடப் பட்டு, மாநிலங்களால் பல்வேறு வகை யில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ண யிக்கப்பட்டு அமலாக்கப்பட்டு வரு கிறது. இவைகள் முறையே மத்திய அரசும், மாநில அரசுகளும் ரூ.156 முதல் ரூ.226 வரையிலும் மாநிலங்கள் அளவில் கேரளாவில் ரூ.110 முதல் 322 வரை தமிழ்நாட்டில் ரூ.82 முதல் ரூ.222 வரை மாறும் பஞ்சப்படி உட்பட தற்போது நடைமுறையில் உள்ளது. யூனியன் பிரதேசங்களான புதுதில்லி, புதுச்சேரி போன்றவை பஞ்சப்படி இன்றி முறையே ரூ.234, ரூ.102 ஆக வும் வழங்கப்படுகிறது. இப்படியாக மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசமாகவே உள்ளது. இதற்கிடையில் 2வது தொழிலா ளர் ஆணையம் விசாரணையின் போது அமைக்கப்பட்ட உபகமிட்டி, ஒருமனதாக மத்திய அரசின் 5வது ஊதியக்குழுவின் சிபாரிசாக அளிக்கப்பட்ட நாலாவது கிரேடு ஊதி யத்தை தரலாம் என சிபாரிசு செய்தது. ஆனால் அந்த 2வது தொழிலாளர் ஆணையத்தின் தலைவரான திரு. ரவீந் திர வர்மா அவர்கள் 1948ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு தனியாகவும், மாநில அரசுகள் வெவ் வேறு அளவிலும் நிர்ணயித்து வழங்கி வரு கின்றன. தற்போது நாம் இந்த முறையை மாற்றும் வகை யில் தலையிட வேண்டும் என்று நிராகரித்து விட்டன. இது இவ்வள வோடு நிற்கவில்லை. 1999ம் ஆண்டில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கிராமப் புற வேலைவாய்ப்புகளுக்கு 1991ம் ஆண்டில் தேசியக்குழு ஒரே மாதிரியான ஊதியம் என்று புதிய கோட்பாட்டை (சூயவiடியேட குடடிடிச டுநஎநட றயபந) நாடு தழுவிய அடிமட்ட குறைந்தபட்ச ஊதியமாக ரூ.35 என்று 1996ம் ஆண்டை அடிப்படை யாகக் கொண்டு நிர்ணயித்து அறிவித்தது. இந்த கோட்பாட்டின்படி தற்போது 01.04.2011 முதல் ரூ.115 என்று உயர் அடிமட்ட குறைந்தபட்ச ஊதியம் என்று வழங்கப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு முதல் விலைவாசியை ஈடுகட்டும் வகை யில் பஞ்சப்படி புள்ளியை இணைக் கலாம் என்று முடிவு செய்தது மத்திய அரசு. ஆனால் இந்த முடிவுகள் அவ் வப்போது மத்திய அரசின் தொழி லாளர் துறையின் தாக்கீதாக மட்டும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறி வுரையாக எந்தத் தொழிலுக்கும் மத்திய அரசால் நிர்ணயித்து அறிவித்துள்ள அடிமட்ட ஊதியத்திற்கும் குறைவாக எந்தத் தொழிலுக்கும் நிர்ணயிக்கக் கூடாது. 1948ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட் டப்படி வழங்கும் ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டு மாநிலங்களும் திருத்தி மாற்றி வழங்கிட முன்வருமாறு கூறப் பட்டுள்ளது. இந்த நடைமுறை கூட முறை யாகப் பின்பற்றப்படாமல் மாநில அரசாங்கங்கள் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக கிடப்பில் போடு வதும், மீறப்படுவதும் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் விதிவிலக்கல்ல. இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதுடன் அனைத்து மத்திய தொழிற்சங்கங் களின் கோரிக்கையாக ரூ.10,000 குறைந்தபட்ச ஊதியமாகவும், விலை வாசியை ஈடு கட்ட பஞ்சப்படியும் அளிக்கப்பட வேண் டும் என்று இன்று ஏறிவரும் விலைவாசி இடுப்பை முறிக்கும், வாடகை, கல்விக் கட்டணம், மருத்துவ செலவு இவைகளில் இருந்து மீள முடியாமல் தொழிலாளர் கள் எதிர்பார்க் கின்றனர். எந்த முடிவும் எடுக்கப்படாமல் எப் போதும் போல் அரசின் முதலாளி கள் ஆத ரவு கொள்கையில் முறிப்பு ஏற்படாவிடில் பிப்ரவரி 28 வேலை நிறுத்தம் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பலாம்.

Leave A Reply

%d bloggers like this: