புதுதில்லி, பிப். 19- உலகின் செல்வம் மிக்க கிரிக்கெட் அமைப்பான இந் திய கிரிக்கெட் வாரியம் ரூ.413 கோடிக்கு மேல் வருமான வரி கட்ட வேண்டும் என்று வரு மான வரித்துறை வாரியத் திடம் கேட்டுள்ளது. வாரியம் அளித்த 2009 – 10ம் ஆண்டின் வருமான மதிப்பீட்டின்படி அது இத் தொகையைக் கட்ட வேண் டும். ஆனால் வாரியம் ரூ.41 கோடிதான் கட்டியுள்ளது என்று தகவல் அறியும் உரி மைச்சட்டத்தின் கீழ் ஆர்வ லர் சுபாஷ் அகர்வால் அளித்த மனுவிற்கு அளித்த பதிலில் இத்தகவல் தெரியவந்துள்ளது. ஒரு அறக்கட்டளை என்ற அடிப்படையில் அதற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. தற்போது வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டபின் அதனுடைய வருமானம் மதிப்பீட்டுக்கு வந்துள்ளது என்று வாரியம் தெரிவித்துள்ளது. 2009 – 10ம் ஆண்டில் வாரியத்தின் வரு மானம் ரூ.964 கோடியை தாண்டியுள்ளது. வருமான வரித்துறை அதனிடம் ரூ.413 கோடி கட்டுமாறு கூறியுள் ளது. ஆனால் வாரியம் 41.91 கோடி மட்டுமே கட்டியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: