விருதுநகர், பிப். 19- விருதுநகர் சுலோச்சனா தெருவில் கர்மவீரர் காம ராஜர் பிறந்த வீடு உள்ளது. அதை நினைவு இல்ல மாக செய்தி மக்கள் தொடர்புத் துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து 4 பேர் கொண்ட குழு காமராஜர் இல்லத்திற்கு வந்தது. அவர் கள் அதை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்வதாக கூறினர். பின்பு, மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பாலாஜியை சந்தித்து பேசினர். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.மாரி யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply