விருதுநகர், பிப். 19- 1946 பிப்ரவரி 19 கப்பற்படை எழுச்சி தினமாகும். அதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் செந்தொண்டர் அணி வகுப்பு நடைபெற்றது. விருதுநகர் காந்தி சிலையிலிருந்து பேரணி துவங் கியது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஞான குரு தலைமையேற்றார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்பு, முக்கிய வீதிகள் வழியாக செந்தொண்டர் பேரணி தேசபந்து மைதானத்தை வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற அணிவகுப்பு மரியாதை ஏற்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. வேலுச்சாமி தலைமையேற்றார். மாவட்டச் செய லாளர் அ.சேகர் முன்னிலை வகித்தார்.மாநிலக் குழு உறுப்பினர் ச.தமிழ்ச்செல்வன் அணிவகுப்பு மரி யாதையை ஏற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.முருகேசன், ஏ.குருசாமி, எஸ்.லட்சுமி, கே.அர்ச்சுணன், பி.என். தேவா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.முத்துக் குமார், ஜெ.ஜே.சீனிவாசன், எம்.தாமஸ், எம்.சுந்தர பாண்டியன், வீ.மாரியப்பன், பி.நேரு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்

Leave a Reply

You must be logged in to post a comment.