கோஹிமா, பிப். 19- கடந்த பிப்ரவரி 11 அன்று தடை செய்யப்பட்ட நாகா தீவி ரவாத அமைப்பான என்எஸ்சி என் கோலே கிட்டோவி அமைப்பால் கடத்தப்பட்ட ஜேம்ஸ் கோயாரி என்ற வர்த்த கர் டிமாபூரில் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்ட னர். டிமாபூரில் பர்மா முகாம் அருகில் உள்ள ஒருவீட்டில் இருந்து ஜேம்ஸ் கோயாரி மீட்கப்பட்டார் என்று அசாம் துப்பாக்கிப் படையினர் வெளி யிட்ட செய்திக் குறிப்பு கூறு கிறது. கோயாரி கடத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் 29 அசாம் துப்பாக்கிபடையும் டிமாபூர் காவல்படையும் சேர்ந்து இவரைத் தேடத் தொடங்கின. அவர்களுடைய முயற்சி பலன் அளித்தது. கட்டுமான ஒப்பந்தக்காரரான ஜேம்ஸ் கோயாரி கட்டப்பட்ட கண் களுடன் வீட்டில் அடைக்கப் பட்டிருந்தார்.

Leave A Reply

%d bloggers like this: