இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான நான்காவது கட்ட வாக்குப்பதிவு ஞாயிறன்று நடந்து முடிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்த லைப் போன்று முக்கியத்துவம் பெற்ற இந்த மாநிலத் தேர்தல் நாடு முழுவதும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. சிறுபான்மை முஸ்லிம் மக்களின் சமூக- பொருளாதார – பண்பாட்டு வாழ்வாதாரம் குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜேந்திர சர்ச் சார் குழுவின் பரிந்துரைகளை கண்டுகொள்ள மறுத்தது, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்ட ணிக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி. மதவழி, மொழிவழி சிறுபான்மை மக்கள் குறித்து ஆய்வு செய்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான குழு, முஸ்லிம் மக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. மத்திய அரசு இதை அம லாக்க மறுத்து வருகிறது. இதை செயல்படுத் திய ஒரே ஆட்சி மேற்குவங்கத்தில் இடதுமுன் னணி ஆட்சி மட்டுமே. ஆனால் உத்தரப்பிர தேச மாநில முஸ்லிம் மக்களை குறி வைத்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் முஸ்லிம் மக்கள் மீது டன் கணக்கில் பாசத் தை பொழிகிறார்கள். உத்தரப்பிரதேச மாநில தேர்தல் களம் இன்றைய இந்திய அரசியல் களத்தையே படம்பிடிப்பதாக உள்ளது. அனைத்து முதலா ளித்துவக் கட்சிகளும் பாரபட்சமில்லாமல் பண வெள்ளத்தை பாயவிடுகின்றன. ஊழல், கருப்புப் பணம், சட்டவிரோத வரிஏய்ப்பு போன்றவற்றின் மூலம் திரட்டப்படும் பணபலம் தேர்த லில் பயன்படுத்தப்படுகிறது என்றும், இது ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத் தை விளைவிக் கக்கூடியது என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது கவனத்தில் கொள் ளத்தக்கது. “பெரும் அளவு தீங்கிழைக்கக்கூடிய பணப்பிரயோகத்தாலும், நவீன தாராளமய மாக்கல் அணுகுமுறையாலும் நாடாளு மன்ற ஜனநாயக முறையே சிதைவுக்குள் ளாக்கப்படுகிறது. பணபலம் மற்றும் கிரி மினல்கள், மாஃபியா கும்பல்களை பயன் படுத்துதல் உள்ளிட்டவற்றால் ஜனநாயகம் கீழிறக்கப்படுகிறது” இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20வது அகில இந்திய மாநாட்டிற்கான அரசியல் நகல் தீர்மானத்தில் எச்சரிக்கப்பட் டுள்ளது. இந்த எச்சரிக்கை எந்தளவுக்கு உண்மையாக உள்ளது என்பதை உத்தரப் பிரதேச மாநில தேர்தல் களம் உணர்த்துகிறது. சாதி மற்றும் பணபலத்தை அடிப்படை யாகக் கொண்டே முதலாளித்துவ கட்சிகள் தங்களது வேட்பாளர்களை பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த கட்சி கள் அறி வித்துள்ள வேட்பாளர் பட்டியலில் 35 சதவீ தம் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர் கள். இதில் 30சதவீதம் பேர் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற கொடும் குற்றம்சாட்டப்பட்டவர்கள். இதில் இன்னொரு வேதனையான விசயம் என்னவென்றால், 60க்கும் மேற்பட்டவர்கள் சிறை யிலிருந்தபடியே போட்டியிடுவதுதான். வித்தியாசமான கட்சி என்று தன்னை கூறிக்கொள்ளும் பாஜகவும், கிரிமினல் பின்னணி கொண்ட பலருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. சாதி அரசியலும் உத்தரப்பிரதேச மாநி லத்தில் புகுந்து விளையாடுகிறது. உத்தரப் பிரதேசத்தில் ஜாட்டுகள் 10சதவீதம், தாக்குர் கள் 5 சதவீதம், பிராமணர்கள் 15 சதவீதம், பிற மேல்தட்டு ஜாதியினர் 5 சதவீதம், யாதவ்கள் 18 சதவீதம், முஸ்லிம்கள் 18 சதவீதம், தலித்துகள் 21 சதவீதம் மற்றும் பிற சாதியினர் 9 சத வீதம் என்றளவில் உள்ளதாக ஒரு கணக் கெடுப்பு கூறுகிறது. பெரும்பாலான கட்சிகள் அந்தந்த தொகுதி வேட்பாளர்களை முடிவு செய்யும்போது சாதி பலத்தை அடிப்படையாகக் கொண்டே தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தொகுதியை முடிவு செய்வது மட்டுமல்ல, சில கட்சிகள் சாதி அடிப்படையிலேயே வெளிப் படையாக இயங்குகின்றன. கடந்த முறை தலித் மக்கள் மற்றும் பிராமணர்களின் வாக்குகளை கணிசமாக கவர்ந்ததாலேயே மாயாவதி கட்சியால் வெற்றிபெற முடிந்தது. அரசியல் கட்சிகளின் கூட்டணி என்பது ஒரு புறமிருக்க, சாதிகளின் கூட்டணியும் தேர்தல் முடிவை தீர்மானிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு சாதி அரசியல் மற்றும் பண பலம் புகுந்து விளையாடுவது இந்தியாவின் அரசியல் கட்டமைப்பையே தகர்க்கக்கூடிய தாக மாறிவிடுகிறது. நாட்டின் இறையாண் மைக்கு ஊறுவிளைவிக்கிறது. அமெரிக்காவுடனான தேசவிரோத அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட்ட முந்தைய ஐ.மு.கூட்டணி அரசுக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவை விலக்கிக் கொண்டன. ஆனால் இந்தக் கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு அரசை ஆதரித்தன. சட்டமன்றங்க ளில் மட்டுமின்றி, நாடாளுமன்ற இடங்களுக் கும் கூட சாதி மற்றும் பணபலத்தை அடிப் படையாக வைத்து வெற்றிபெற்று வரும் கட்சி கள் மற்றும் வேட்பாளர்கள், நாட்டின் முக்கிய முடிவுகளில் கூட பணம் மற்றும் சாதி அணு குமுறையை பின்பற்றுகின்றனர். இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் எளிதாக விலை போய்விடு கிற காட்சியையும் காண்கிறோம். தேசிய அளவில் சாதிய, மதவெறி அர சியலுக்கு எதிராகவும், ஊழல் மற்றும் கருப்புப்பணத்தால் ஊதிப்பெருத்த பணபல அரசியலை எதிர்த்தும் போராட வேண்டியதன் தேவையையே உத்தரப்பிரதேச தேர்தல் களம் உணர்த்துகிறது.

Leave A Reply