பிரிட்டோரியா, பிப். 19- உலகத் தொழிற்சங்க அமைப்பின் (றுடிசடன குநனநசயவiடிn டிக கூசயனந ருniடிளே) பிரதி நிதிகள் அதன் பொதுச் செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் தலைமையில் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமாவை பிப்ரவரி 11 அன்று சந்தித் தனர். தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு நடந்தது. இந்தியா, வியட்நாம், கியூபா, பாலஸ்தீனம், சூடான், வெனிசூலா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைமைக் குழு உறுப்பினர் களும், சீனாவைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர் ஒருவரும் அவரைச் சந்தித்தனர். இக்குழுவில் சிஐடியு தலைவரும், உலகத் தொழிற்சங்க அமைப்பின் துணைத் தலைவருமான ஏ.கே.பத்மநாபன் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். பிப்ரவரி 9, 10 ஆகிய தேதிகளில் நடந்த தலைமைக் குழு கூட்டத்தில் விவாதிக் கப்பட்டவை குறித்து இக்குழு ஜனாதிபதி ஜூமாவிடம் தெரிவித்தது. பல முன் அலுவல்கள் இருந்தபோ தும் வீடியோ மூலம் மாநாட்டுக்கு செய்தி அனுப்பியதற்கு பிரதிநிதிகள் ஜூமாவிடம் நன்றி தெரிவித்தனர். நேர டியாக கூட்டத்தில் ஜனாதிபதி உரை யாற்ற இயலாததால் அவர் பிரதிநிதி களைச் சந்திக்க இசைவு தெரிவித்தார். ஜனாதிபதி ஜுமாவுக்கும், நூற் றாண்டு விழா கொண்டாடும் ஆப் பிரிக்க தேசிய காங்கிரசுக்கும் ஒவ் வொரு பிரதிநிதியும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ஜூமா விரிவான விவாதம் நடத்தினார். தலைமைக் குழுவின் முடிவுகளை வரவேற்ற அவர், ஜோகன்னஸ் பர்க்கில் உலகத் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படுவ தற்கும் பாராட்டு தெரிவித்தார். உலகத் தொழிற்சங்க கூட்ட மைப்பை ஆப்பிரிக்காவில் வலுவாகக் கட்டுவதற்கும், ஆப்பிரிக்க தொழிலா ளர்கள் மத்தியில் வர்க்க உணர்வை மேம்படுத்தவும், இந்த அலுவலகத் திறப்பு பயன்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். விவாதங்க ளின் போது அவர் பல்வேறு அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பிரச்ச னைகள் குறித்து உரையாடினார். ஜனாதிபதி ஜுமா, உலகத் தொழிற் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலா ளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ், தென் ஆப் பிரிக்க தொழிற்சங்க மையத்தின் தலை வர் டிலாமினி ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: