இராமநாதபுரம், பிப். 19- இராமநாதபுரத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த திமுக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ ருக்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோரை போலீசார் தேடி வருகின் றனர். இராமநாதபுரம் அருகே வுள்ள சூரங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி. இவருக்கு சொந் தமாக 1ஏக்கர் நிலம் உள் ளது. இதில் 16 செண்டு நிலத்தை அதே பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவ ரின் மனைவி காளியம்மாள் விலைக்கு வாங்கினார். இந்த பட்டாவை பயன் படுத்தி காளியம்மாளின் மகன் சண்முகநாதன், வரு வாய்த்துறையினர் துணை யுடன் காமாட்சியின் மீதம் உள்ள நிலத்தை தாய் காளி யம்மாள் பெயரில் மாற்றி விட்டார். இதன் மதிப்பு தற்போது ரூ.40 லட்சம் வரையில் உள்ளது. இந்த நிலத்தை மீட்டுத்தரக் கோரி காமாட்சி முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் செய் தார். இந்த புகாரின் அடிப் படையில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க நிலமோசடி தடுப்பு பிரி வுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் உத்தரவிட்டார். இதன் பேரில் நில மோசடி தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.உதயகுமார் வழக்குப் பதிவு செய்து திமுக வழக்கறிஞர் சண்முக நாதனை கைது செய்தனர். மேலும் இந்த மேசடிக்கு துணையாக இருந்த சண் முகநாதனின் தாய் காளியம் மாள், தந்தை சந்தானம் ஆகி யோரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.