மாநிலங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு வலிமை யோடும், தன்னதிகாரச் சுதந்திரத்தோடும் இருக் கிறதோ, அந்தளவுக்கு நாடும் ஒரு கூட்டாட்சியின் வலிமையோடு பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால் மத்திய ஆட்சியாளர்களோ, மாநிலங்களின் அதிகாரங்களை மதித்துக் கூட்டாகச் செயல் படுவதே கூட்டாட்சி என்பதை ஏற்க மறுக்கிறார்கள். குறிப்பாக, மத்திய அரசின் தலைமைப் பொறுப் பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமை, மாநிலக் கட்சிகளுடனான கூட்டணி உறவோடு ஆட்சிக்கு வந்தாலும் கூட, ஒரு மேலாதிக்கப் புத்தி யோடு, மாநிலங்களின் அதிகாரங்களில் கைவைக் கிற வேலையில் அடுத்தடுத்து இறங்குகிறது. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள “தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்” (என்சிடிசி) தொடர்பான ஆணை அப்படியொரு செயல்தான். “என்சிடிசி (அமைப்புச் செயல்பாடு கள் – அதிகாரங்களும் கடமைகளும்) ஆணை – 2012” என்ற அந்த ஆணையை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கண்டுகொள்ளா மலிருக்க, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார், பிரத மருக்கும் உள்துறை அமைச்சருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் அழுத்தமாகக் கூறியிருப்பது போல், பொது ஒழுங்கு, காவல் இரண்டும் மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாக வரையறுக்கப்பட் டுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தின் மூலமாக மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த ஆணை, மாநிலங்களின் அதிகாரங்கள் மீதான ஒரு ஆக்கிரமிப் பாக வந்திருக்கிறது. தமிழக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப் பிட்டிருப்பது போல, இப்படியொரு ஆணையைப் பிறப்பிப்பதற்கு முன் மாநிலங்களுடன் கலந்தா லோசிக்க வேண்டும் என்ற அரசியல் பண்பைக் கூட மத்திய அரசு கைக்கொள்ளவில்லை. மேற்குவங்கத்தின் பாடு பகுதியில் நடந்த தேசிய காவல் படை (என்எஸ்ஜி) மண்டலப் பிரிவு தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், உள்நாட்டுப் பாதுகாப்பு ஒரு கூட்டுப் பொறுப்புதான் என்று கூறியிருக்கிறார். அந்த மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி என்சி டிசி-க்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்ததன் பின்னணியில் அமைச்சர் இப் படிப் பேசியிருக்கிறார். ஆனால் அவரது அமைச் சகத்தின் செயல்பாடு, அவர் இவ்வாறு கூறியுள்ள கருத்தைப் பிரதிபலிக்கவில்லை. வெறும் சம்பிர தாயத்திற்காகவா அவர் இப்படிப் பேசினார்? பல முனைகளிலிருந்து பயங்கரவாதத் தாக்கு தல்கள் தொடுக்கப்படுகிற சூழலில், நாடு தழுவிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், தற்போது உளவு அமைப்புகள், காவல் அமைப்புகள் போன்றவற்றுக்கிடையே போதுமான ஒருங்கி ணைப்பின்மையை சரிப்படுத்துவது, மாநில அரசு களோடு கலந்தாலோசித்து பொதுக்கருத்தை உரு வாக்குவதன் அடிப்படையில் வேண்டிய நடவடிக் கைகளை மேற்கொள்வது, மாநிலங்களின் காவல் அமைப்புகளை செயல்பட வைப்பது என்ற வழி முறைகள்தான் பலனளிக்கும். திரிபுராவில் பயங்கரவாதச் செயல்கள் கட்டுப் படுத்தப்பட்டதன் பின்னணியில் அந்த மாநில அரசின் அணுகுமுறைகள் வெற்றிகரமான வழிகாட் டியாக இருக்கின்றன. அந்த வழியில் செல்ல மத்திய அரசு தயாராக இருக்கிறதா என்பதுதான் கேள்வி.

Leave A Reply

%d bloggers like this: