தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 840 கிராமங்களில் 26,350 குழந்தைகளை திறனாய்வு செய்து இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் 6-14 வயது வரை யுள்ள குழந்தைகளில் 99.1 சதவீதத்தினர் பள்ளிக்குச் செல் கின்றனர். 11-14 வயதுள்ள பெண் குழந்தைகளில் 98.7 சத வீதம் பேர் பள்ளிக்குச் செல்கின்றனர். முதல் வகுப்பு குழந்தை களில் 45.8 சதவீதத்தினரால் மட்டுமே தமிழ் எழுத்துக்களை அடையாளம் காட்ட முடிகிறது. 3-5 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில் 32 சதவீதம் பேரால் மட்டுமே தமிழில் எளிய பத்திகளைப் படிக்க முடிகிறது. இது தேசிய அளவிலான குழந்தைகளின் பத்தி வாசிப்புத் திறனைவிட 16 சதவீதம் குறைவு. மேலும் இவர்களில் 41.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே சாதாரண கழித்தல் கணக்குகளை செய்ய முடிகிறது. 2-ம் வகுப்பில் படிக்கும் 44.1 சதவீத குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 5-ம் வகுப்பில் படிக்கும் 32.3 சதவீத குழந்தைகளால் மட்டுமே 2-ம் வகுப்பு கதையை வாசிக்க முடிகிறது. 5-ம் வகுப்பில் படிக்கும் 14.2 சதவீத குழந்தைகளால் மட்டுமே வகுத்தல் கணக்குகளை போட முடிகிறது. 52.3 சதவீத பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர் – மாணவர் விகிதம் கட்டாய கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு உட்பட்டுள்ளது. 48.4 சதவீத பள்ளிகளில் மட்டுமே கழிவறைகள் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. 77.6 சதவீத பள்ளிகளில் குடிநீர் வசதி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: