பெர்காம்பூர், பிப். 18- பெர்காம்பூர் ரயில் நிலையத்தினருகில் 3 மாவோயிஸ்ட் டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல போஸ்டர்கள் மற்றும் பத்திரிகைகள் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் தெரிவித்தனர் கோராபுத் மாவட்டம் நாராயண்பாட்னாவைச் சேர்ந்த சிக்கு நச்சிகா, சக்கர டடாங்கி, பிஜய் டடாங்கி ஆகியோர் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இம்மூவரிடமிருந்து காமிரா, போஸ்டர்கள் மற்றும் மாவோயிஸ்ட் இதழ்கள் கைப்பற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: