புதுதில்லி, பிப். 18- இந்தியாவில் பயங்கரவாத நடவடிக் கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்கா வைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண் டுள்ளது. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் களில் லஷ்கர்-இ-தொய்பா வின் ஏஜெண் டாக இருந்த ஹெட்லி செயல்பட்டுள்ள தாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட் டுள்ளது. இதே வழக்கில் மேலும் 8 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply