ஒரு நாளைக்கு மூன்று வாழைப்பழங்களைச் சாப்பிடு வதன் மூலம் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என்று பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காலை சிற்றுண்டியில் ஒன்று, மதிய உணவோடு ஒன்று, இரவு உணவோடு சேர்த்து ஒன்று என்று மூன்று வேளைகளும் வாழைப்பழங்களைச் சேர்த்து சாப்பிடுவதால் போதிய அளவு பொட்டாசியம் நமது உடலுக்குக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 21 விழுக் காட்டினருக்கு இந்தப் பாதுகாப்பை வாழைப்பழம் தரும். ஒவ்வொரு வாழைப்பழத்திலும் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாசியம் இருக்கிறது. மேலும் பசலைக்கீரை, பருப்பு வகைகள், பால், மீன் மற்றும் அவரை போன்றவற்றி லும் பொட்டாசியம் ஏராளமான அளவில் இருக்கிறது. பொட்டாசியம் போதிய அளவில் எடுத்துக்கொள்ளாவிட் டால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வேறு பல பிரச்சனைக ளும் வரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Leave A Reply