கரூர், பிப். 18- பிப்ரவரி 28ம்தேதி யன்று அகில இந்திய அள வில் நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட் டத்தை கரூர் மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்வதற் கான ஆயத்தப்பணிகள் குறித்த சிஐடியுவின் சிறப்பு பேரவை கூட்டம், கரூரில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் கா.கந்தசாமி தலை மை வகித்தார். சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜ் சிறப்பு ரையாற் றினார். மாவட்டச் செயலாளர் ஜி.ஜீவானந்தம், அகில இந் திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு கரூர் மாவட்டத்தில் மேற் கொண் டுள்ள ஆயத்தப் பணிகளை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் கே.எஸ்.மணி, மாவட்ட துணைத்தலைவர்கள் என் .ராஜீ, எஸ்.சாம்பசிவம், ஆ. முருகேசன், மாவட்ட துணைச்செயலாளர்கள் என்.ராஜேந்திரன், ஆ.காதர் பாட்ஷா, எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மின் ஊழியர் மத் திய அமைப்பின் செய லாளர் குமரேசன், கட்டு மானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.முரு கேசன், ஆட்டோ தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் என்.ரங்கராஜ், டிஎன்பில் பாதுகாப்புப் பணிகள் சங்கத் தலைவர் கலைச்செல்வன், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பத்மஸ்ரீகாந்தன், நதிநீர் சங்க பொன்னுசாமி ஆகியோர் வேலை நிறுத்த போராட்டம் குறித்து பேசி னர்.

Leave A Reply

%d bloggers like this: