நாகர்கோவில், பிப்.18- பிப்ரவரி 28- ம் தேதி அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங் களின் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்கிறது. இந்நிலையில், அரசு ஊழியர் சங்கத்தின் குமரி மாவட்டக்குழு சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மா நாடு நாகர்கோவிலில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் இராஜகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் கிறிஸ்டோபர் வர வேற்றுப் பேசினார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொரு ளாளர் சுப்ரமணியன், சமூக நலத் துறை பணியாளர் சங் கத்தின் மாநிலச் செயலாளர் துரைசிங் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் சுமதி நன்றி கூறினார். சங்கத்தின் மாவட்ட நிர் வாகிகள் லீடன்ஸ்டோன், மணி, ஜாண் அலெக்சாண் டர், ஆர்தர் டென்னிஸ், சவுந்தர பாண்டியன், இராஜ கோபால்ஆகியோர்உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: