தூத்துக்குடி, பிப்.18- விடுதலை சிறுத்தை கள் கட்சியின் செயலாளர் கொலை தொடர்பாக அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப் பட்டு உள்ளனர். உடன்குடி அருகே உள்ள ஆத்திக்காட்டைச் சேர்ந்தவர் பிரமுத்து மகன் சங்கர் (40). விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவ ட்ட தொண்டர் அணி செயலாளராக இருந்தார். அவருடைய அண்ணன் தாமஸ், சம்பவத்தன்று அன்பின்நகரம் அருகே உள்ள கருமேனி ஆற்றில் மணல் எடுக்க சென்றார். அவருக்கும், அங்கு வந்த கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்த சங்கர் சமரசம் செய்வதற்காக வந்தார். தகராறு முற்றவே கைகலப்பு ஆனது. இதில் ஏற்பட்ட மோதலில் சங் கர் படுகொலை செய்யப் பட்டார். இது தொடர் பாக மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத் தினர். கொலை சம்பவம் தொடர்பாக அன்பின்நக ரத்தைச் சேர்ந்த ஜான்சன் (27), சின்னத்துரை (35), அரோன் (35), அவரு டைய தம்பி தனசீலன் (30) ஆகிய 4 பேரையும் போ லீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்ற னர். சாத்தான்குளம்துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜகோபால் தலைமை யில் இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன் (மெஞ்ஞானபுரம்), இச க்கிமுத்து (நாசரேத்), நட ராஜன் (தட்டார் மடம்) மற்றும் போலீசார் அடங் கிய தனிப்படையி னர் மே லும் சிலரை தேடி வரு கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: