கோவை, பிப். 18 – கோவையில் நிலுவை யில் உள்ள ரயில்வே பணி களை விரைந்து முடித்திடக் கோரி மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவே திக்கு, கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கடிதங்கள் அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித் திருப்பதாவது: ரயில்வே மற்றும் வரு மான வரியில் சலுகைக ளைப் பெற, 85 வயதும் அதற்கு மேற்பட்டவர்களை மிகவும் மூத்த குடிமக்களாக வும் அறிவிக்க வேண்டும். அதே போல், மூத்த குடிமக்களுக்கு ரயிலில் அனைத்து வகுப்புக ளிலும் 60 சதவிகித கட்ட ணச் சலுகையையும், அவர் களின் துணைக்கு ஒருவரை சலுகைக் கட்டணத்தில் அழைத்துச் செல்ல அனும திக்கவும் வேண்டும். அதேபோல், கோவை யைப் புறக்கணித்துச் செல் லும் 13 ரயில்களை கோவை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்படி மாற்றக் கோரி ஏற்கனவே கடிதம் அனுப் பியிருந்தேன். தற்போது அவற்றில் 7 ரயில்கள் கோவை வழியாக நின்று செல்வதற்கான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால், இவைதவிர செய்யப்பட வேண்டிய மற்ற முக்கிய மான பணிகள் அனைத்தும் நிலுவையில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் கோயம் புத்தூர் – திண்டுக்கல் மற்றும் பொள்ளாச்சி – பாலக்காடு அகலரயில்பாதைப் பணிகள் நத்தை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆகவே, ரயில்வே பட் ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லையெனில், இப்பணிகள் மேலும் தாமத மாகும் நிலையில் உள்ளது. ஆகவே, இதனை கருத்தில் கொண்டு வரும் பட்ஜெட் டில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழத்தி லேயே சென்னைக்கு அடுத்த படியாக அதிக வருவாய் ஈட்டும் நகரமாக கோவை திகழ்கிறது. இருப்பினும், தென்னக ரயில்வேயால் கோயம்புத்தூர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகி றது. மேலும், கோயம்புத்தூர் ரயில் நிலையம் ஏ1 கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளது. ஆனால், நிதி பற்றாக்குறை யால் பயணிகளுக்குரிய பல வசதிகள் கிடப்பில் போடப் பட்டுள்ளன. அதேபோல், கோயம்புத்தூரைச் சுற்றி யுள்ள சிங்காநல்லூர், இரு கூர், பீளமேடு, வடகோவை போன்ற ரயில்நிலையங்க ளில் நடைபாதைகள், பிளாட் பார்ம்கள், பிளாட்பார் விளக்குகள் மற்றும் கழிப் பிட வசதிகள் போன்றவை பாதி முடிவடைந்த நிலை யில் அல்லது அழிந்து விட்ட நிலையில் அல்லது வழங்கப்படாமலே இருக்கி றது. சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த மேற்கூரை அமைப் பது உள்ளிட்ட பணிகள் குறைவான நிதி ஒதுக்கீட் டால் கேட்பாரற்று கிடக் கின்றன. கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளையங்களுக் கிடையேயுள்ள ரயில்நிலை யங்களான துடியலூர், வீர பாண்டி, புதுப்பாளையம் மற்றும் உருமாண்டம்பாளை யம் போன்றவற்றை மேம் படுத்தத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யக் கோரி கோவை ரயில்வே போராட்டக்குழுவினர், தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். ஆகவே, வரும் 2012-2013ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் டில் இதுசம்பந்தமாகவும் அறிவிக்க வேண்டும். தற்போது, லாபகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கோயம்புத்தூர் – திருப்பதி விரைவு ரயிலை, பொது மக்களின் வசதிக்காக தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். மேலும், ஈரோடு, திருச்சி வழியாக செல்லும் கோயம் புத்தூர் – இராமேஸ்வரம் விரைவு ரயில், பெங்களூரு – ஜோத்பூர் ரயிலை கோயம் புத்தூர் வரை நீட்டிப்பது, பெங்களூரு, சென்னை, திரு வனந்தபுரம், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு இரவு நேர ரயில் விடுவது உள் ளிட்ட பல கோரிக்கைக ளும் நிலுவையில் உள்ளது. ஆகவே, ரயில்வேயில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, ரயில்வேயை நம்பியிருக்கும் பல்லாயிரக் கணக்கான மக்களின் கனவு களை நிறைவேற்றும் வகை யில், மேற்குறிப்பிட்ட அனைத்து கோரிக்கைகளை யும் கருத்தில் கொண்டு, வரும் 2012-2013ம் ஆண்டிற் கான ரயில்வே பட்ஜெட் டில் சாதகமான நடவடிக்கை களை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத் தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: