சிசிஏ என்ற அமெரிக்க நிறுவனம் அமெரிக்காவின் 48 மாகாணங்களில் சிறை களை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத் திடுவதற்குத் தயாராகி வருகி றது. சிறை நிர்வாகம் குறித்து 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் திட்டமொன்றை அமெரிக்க அரசு தீட்டியுள் ளது. சிசிஏ என்ற நிறுவனம் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் ஒப் பந்தத்தில் கையெழுத்திடப் போகிறது. ஆனால் அதற்கு முன்பாக, சில நிபந்தனை களை அந்த நிறுவனம் போட்டிருக்கிறது. தனது ஒப்பந்தம் 20 ஆண்டுக ளுக்கு நீடிக்க வேண்டும் என்றும், சிறைகள் குறைந் தது 90 விழுக்காடு கைதிக ளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளைப் போடு கிறது. போதை மருந்துக்கெதி ரான நடவடிக்கை, முறை யான ஆவணமில்லாமல் குடியிருப்பவர்கள் போன்ற வற்றால் சிறைகளை நிர்வ கிக்கும் நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வரு கிறது. முதலாளித்துவத்திற்கு எதிரான கைப்பற்றுவோம் போராட்டங்களில் ஈடுபட் டவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்ட னர். இந்நிலையில்தான் 48 மாகாணங்களில் சிறை களை நிர்வகிக்கவிருக்கும் சிசிஏ நிறுவனம், 90 விழுக் காடு அளவுக்காவது சிறை கள் நிரம்பியிருக்க வேண் டும் என்று நிர்ப்பந்திக்கிறது. இது குறித்து ஆய்வு செய்துள்ள அமெரிக்க சிவில் உரிமைகள் கழகம், லாபத்தை குறி வைப்பதால் கைதிகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. வருங் காலத்தில் குற்றங்களில் அவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கான வழிகாட்டு தல்கள், பயிற்சிகள், போதை யிலிருந்து மீட்டல் போன் றவை நடப்பதில்லை. இந்த நிகழ்ச்சிகளால் சிறைகளில் உள்ள எண் ணிக்கை குறைந்துவிட்டால் தங்கள் லாபத் திற்கு ஆபத்து என்பதுதான் சிறைகளை நிர்வகிக்கும் தனியார் நிறு வனங்களின்எண்ணம்என்று குற்றம்சாட்டப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: