1932ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் குழுவில் உறுப்பினராக இணைந்து டெஸ்ட் தகுதிபெற்ற இந்திய அணி முதல் டெஸ்ட் வெற்றி பெறுவதற்கு இருபது ஆண்டுகாலம் ஆகியது. அந்த வெற்றியின் மணிவிழாவைக் கொண்டாட முடியாதபடி இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியிடம் பட்டது போதாதென்று ஆஸ்திரேலிய அணியிடமும் துவைபடும் சூழலில் அந்நாள் வந்து சென்றது. 1952 பிப்ரவரி 10 அன்று இந்தியா முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியை வென் றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அன்று நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் எட்டு ஓட்டங் கள் வேறுபாட்டில் இங்கிலாந்தை தோற்கடித் தது. அன்றைய தினம் வெற்றி பெற்ற அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு கிடைத்த சன்மானம் ரூ.250 மட்டுமே. ஆல் ரவுண்ட் திறமை அன்றைய நாளில் ஆடிய இந்திய அணி யில் கணிசமான ஆல் ரவுண்டர்கள் இருந்த னர். அணித்தலைவர் விஜய் ஹஜாரே தொடக்க ஆட்டக்காரர் மட்டுமல்ல மிதவேகப்பந்து வீச் சாளரும் கூட. லாலா அமர்நாத், டட்டு பட்கர், பாலி உம்ரிகர் ஆகியோர் பந்து வீசுவதிலும் மட்டைப் பிடிப்பதிலும் கெட்டிக்காரர்கள். முன்வரிசையில் பங்கஜ்ராய், முஷ்டாக் அலி ஆடும் ஆட்டம் அமர்க்களமாய் இருக்கும். மன் காடின் இடதுகைச் சுழலும், குலாம் அகமதின் ஆப் ஸ்பின்னும் சூப்பர். இங்கிலாந்து அணி இந்தியாவின் வெற்றி களையும் தோல்விகளையும் மதிப்பிட்டு இரண்டாம் தரஅணியை இந்தியாவுக்கு அனுப் பியது. ஹட்டன், வாஷ்புரூக், காம்டன், எட்ரிச், பெட்சர், லேக்கர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. பிம்கிராவ்னி, பிரியன் ஸ்டேதம், ராய் டேட்டர்ஷேல் ஆகியோர் அணியில் இருந்தனர். முதல் மூன்று டெஸ்ட்டுகளும் வெற்றி தோல்வியின்றி முடிந்தன. நான்காவது டெஸ்ட் கான்பூரில் நடந்தது. இங்கிலாந்து ஒன்பது விக்கெட்டுகளில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றது. சென்னை டெஸ்ட் டில் தலைவர் நைஜல் ஹோவர்ட் காயம் கார ணமாக ஆடவில்லை. அணிக்கு டொனால்ட் கார் தலைமை ஏற்றார். ஓட்டக்குவிப்பு நாணயச்சுண்டலில் வென்ற கார் ஆடத் தீர்மானித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங் கிலாந்து ஐந்து விக்கெட் இழப்புக்கு 224 ஓட் டங்கள் எடுத்திருந்தது. மறுநாள் ஆறாம் ஜார்ஜ் மன்னர் இறந்ததால் இரண்டாம் நாள் ஓய்வு நாளாக மாற்றப்பட்டு, ஓய்வுநாள் ஓட்ட நாளாக மாறியது. மன்காடின் அபார சுழலில் இங்கிலாந்து 266 ஓட்டங்களில் சுருண்டது. மன் காட் 55 ஓட்டங்கள் கொடுத்து எட்டு பேரை வெளியேற் றினார். வெற்றியின் மணம் வீசத்தொடங்கியது. அடுத்து ஆடிய இந்திய அணி ஓட்டங் களை மலையாய்க்குவிக்கும் எனக் கருதப்பட் டது. ஆனால் முஷ்டாக் அலி, ஹஜாரே, மன் காட், அமர்நாத் ஆகியோர் 20களிலும் 30 களிலும் ஆட்டம் இழந்தனர். பங்கஜ்ராய் 111 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம்இழந்தபோது இந்தியா 191க்கு 4 என இருந்தது. விரைவில் அமர்நாத்தும் ஆட்டமிழந்தார். இந்தியா ஸ்கோர் 216/5. ஹேமு அதிகாரியின் சுளுக்கால் அணி யில் இடம்பெற்ற உம்ரிகரும் டட்டு பட்கரும் சிறப்பாக ஆடினர். உம்ரிகர் ஆட்டமிழக்காமல் 130 ஓட்டங்கள் எடுத்தார். அவருக்கு துணை யாக பட்கர் (61), சி.டி.கோபி நாத் (35) ஓட்டங் களைக் குவித்தனர். இந்தியா 9 விக்கெட் இழப் புக்கு 457 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 192 ஓட்டங்கள் எடுத்தால் இந்தியா மீண் டும் ஆடவேண்டும் என்ற நிலையில் இங்கிலாந்து 183 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தது. வேகப் பந்து வீச்சாளர்கள் தொடக்க ஆட்டக்காரர் களை வெளியேற்ற, மற்ற எட்டு பேரையும் மன் காடும் குலாம் அகமதும் பகிர்ந்து கொண்டனர். ராபர்ட்சனும் (56), வாட்கின்சும் (48) சற்று தாக் குப்பிடித்தனர். நான்கு பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினர். மன்காட் இந்த டெஸ் டில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய வீரர்கள் ஊக்கத்தொகை 250 உடன் வீடு சென் றனர். கான்பூரில் தோனியின் அணி இலங்கை யை வீழ்த்தியது. இது இந்திய அணியின் நூறா வது டெஸ்ட் வெற்றி. அணியில் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ.25 லட்சத்தை இந்திய வாரியம் அளித்தது. என்னவொரு முரண்பாடு! நம்ப முடியாத வெற்றி. இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி. இந்த வெற்றி மிகுந்த மன நிறை வை அன்று மட்டும் அல்ல இன்றும் அளிக் கிறது என்று இந்திய அணிவீரர் சி.டி.கோபிநாத் இப்போது நினைவு கூர்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: