சென்னை, பிப். 18 – மீன்வளத்துறையின் கீழ் உள்ள நியாயவிலைக்கடை ஊழியர் ஊதிய அரசாணை யினை திருத்தி வெளியிட வேண்டும் என சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. மீன்வளத்துறையின் கீழ் 50க்கும் மேற்பட்ட கூட்டு றவு நியாயவிலைக் கடை கள் நடத்தப்பட்டு வருகின் றன. இந்த நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பொது விநி யோக திட்டப்பணிகள் மற் றும் மீனவர் கூட்டுறவு சங் கங்களின் பணிகளையும் செய்து வருகின்றனர். இவர் களது ஊதியம் பல ஆண்டு களாக மாற்றம் செய்யப் படாமல் இருந்தது. கூட்டு றவு நியாயவிலைக்கடைக ளுக்கு வழங்கப்படும் ஊதி யத்தை வழங்கிட வேண்டு மென தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐ டியு) தொடர்ந்து வலியுறுத்தி கடிதம் அளித்தும், போராட் டங்கள் நடத்தியும் வந்தது. நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அரசாணை-185, கூட் டுறவு உணவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத்துறை, நாள் 29.12.2010ல் வெளியி டப்பட்டது. இவ்வாணை பத்தி 6ல் மீனவர் கூட்டுறவு சங்கம், காதி கிராமயோதச் சங்கம், பனைவெல்லம் தயா ரிப்போர் சங்கம், நீலகிரி மாவட்ட தேயிலை எஸ்டேட் பணியாளர்கள் சங்கம் போன்ற செயற்பதிவாளர் கள் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடை விற் பனையாளர், எடையாளர் களுக்கு ஊதியம் வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கால்நடை பரா மரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையில் 10.1.2012 அன்று அரசாணை எண் 6 வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாணையில் மீன்வளத் துறையின் கீழ் உள்ள நியாய விலைக்கடை ஊழியர்க ளுக்கு கூட்டுறவு, உணவு மற் றும் நுகர்வோர் பாதுகாப் புத்துறையால் வெளியிடப் பட்ட அரசாணையில் (289/28.9.2007) நிர்ணயிக்கப் பட்ட ஊதியத்தை நிர்ண யித்து வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு 2007க்குப்பின் 2010ல் ஊதியம் திருத்தியமைக்கப்பட்ட பின் இரண்டு ஆண்டுகாலம் கழித்து மீன்வளத்துறை யால் 2012ல் வெளியிடப் பட்ட ஊதிய ஆணையில், 2007ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயிப்பது மீனவர் கூட்டுறவு சங்க நியா யவிலைக்கடை ஊழியர் களை வஞ்சிப்பதாகும். மேலும் கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்க ளுக்கு தொகுப்பூதியம் ஓராண்டு என்றுள்ள நிலை யில் மீனவர் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஐந்து ஆண் டுகள் என நிர்ணயிப்பது ஊழியர்களை பெரிதும் பாதித்துள்ளது. பொது விநியோகத் திட் டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என எண்ணுகிற தமிழக அரசு, சமவேலைக்கு சமஊதியம் என்ற கோட் பாட்டிற்கு மாறாக கூட்டு றவுத்துறை, மீன்வளத்துறை கீழ் உள்ள நியாயவிலைக் கடை ஊழியர்களை வஞ்சிக் கும் நிலையினை மாற்றிக் கொள்ள வேண்டும். கூட்டுறவு நியாயவிலைக் கடைஊழியர்களுக்கு இணை யான ஊதியம் நிர் ணயித்து, திருத்திய அரசாணை வெளி யிட்டு அமலாக்கிட வேண் டுமென சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் பி.எம். குமார் , பொதுச் செயலாளர் ஆ. கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள் ளனர்.

Leave A Reply

%d bloggers like this: