ஈரோடு, பிப். 18- லாரி தொழிலாளர்க ளின் வாழ்வுரிமை மாநாட்டை வருகின்ற மார்ச் மாதம் 24-ம் தேதி நாமக் கல்லில் நடத்துவது என தமிழ்நாடு சாலைப் போக்கு வரத்துத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாலைப் போக்குவரத்துத் தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சம்மேளனத்தின் தலைவர் ஏ.பி. அன்பழகன் தலைமை யில் வியாழனன்று ஈரோட் டில் நடைபெற்றது. ஈரோடு அரசு போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் அலுவலகத் தில் நடைபெற்ற இக்கூட் டத்தில் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் அனை வரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், வரு கின்ற பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் சாலைப் போக்குவரத்தில் உள்ள அனைத்து வாகனங்களும் கலந்து கொண்டு வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. மேலும் வெளி மாநிலங் களுக்கு இயக்கப்படும் லாரி ஓட்டுனர்கள், கிளீனர்கள் அனைவருக்கும் உரிய பாது காப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலா ளர் சம்மேளனம் சார்பில் வருகின்ற மார்ச் மாதம் 24-ம் தேதி நாமக்கல் மாவட் டத்தில் ‘லாரி தொழிலாளர் களின் வாழ்வுரிமை மாநாடு’ நடத்துவது எனவும் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் பாண்டிச்சேரி உள் ளிட்ட மாநிலங்களிலிருந் தும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதில் அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத் தின் பொதுச் செயலாளர் கே.கே. திவாகரன், சி.ஐ.டி.யு தமிழ் மாநில பொதுச் செய லாளர் அ. சவுந்தரராசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: