புதுதில்லி, பிப். 18 – மாநிலங்களுக்கு வழங் கப்பட்ட பல உரிமைகளை ரத்து செய்யும் போக்கை ஏற்படுத்தும் வகையில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 9 மாநில முதல்வர் கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். இத்தகைய செயலுக்கு உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ப.சிதம் பரத்தின் பொறுப்பின் மையே காரணம் என்று தமிழக முதலமைச்சர் ஜெய லலிதாவும், ஒடிசா முதல மைச்சர் நவீன் பட்நாயக் கும் குற்றம் சாட்டியுள் ளனர். ஆனால், இது மாநில உரிமைகளைப் பாதிக்காது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பயங்கரவாத செயல்க ளைத்தடுக்க மத்திய அரசு புதிய புதிய யோசனைகளை அமலாக்கி வருகிறது. நாட் டின் எந்தப்பகுதியிலும், எப் போது வேண்டுமானாலும் மத்திய அரசின் காவல்துறை யினர் அல்லது உளவுப்பிரி வினர் நேரடியாகச் சென்று தலையீடு செய்யும் விதத்தில் தேசிய பயங்கரவாதத்தடுப்பு மையம் என்ற பிரிவு அமெ ரிக்காவில் செயல்படுகிறது. அமெரிக்காவின் திட் டத்தை இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமல்படுத்த முனைந் துள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் இந் தியாவிலும் தேசிய பயங்கர வாத தடுப்பு மையம் செயல் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி, சட்ட விரோத செயல்கள் (தடுப்பு) சட்டம் 1967 பிரிவு 2 (இ)-ன் கீழ் தேசிய தீவிரவாத தடுப்பு மையத்தின் இயக்குநர் தலைமை அதிகாரியாக செயல்படுவார்; அந்த மையத்தின் செயல்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு, சோதனையிடும் அதிகார மும், கைது செய்யும் அதி காரமும் வழங்கப்படுகிறது; மாநிலங்களுக்கு இடையே நுண்ணறிவு ஒத்துழைப்புக் குழுக்களை அமைக்கவும் இந்த மையத்திற்கு அதிகா ரம் உள்ளது; இந்த மையம், தனது கடமையை ஆற்றும் வகையில், ஆவணங்கள், அறிக்கைகள், கணினி சார்ந்த குற்றம் உள்பட தேவையான அனைத்து தக வல்களை திரட்டவும், புல னாய்வு அமைப்புகளிடம் இருந்து எந்த வகையிலான தகவல்களை சேகரிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது; வழக்கின் தன்மைக்கேற்ப ரகசியம் காக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப் படையில் சம்பந்தப்பட்ட புலனாய்வு அமைப்புகள் தகவல்களை கொடுக்கலாம் என பயங்கரவாதத் தடுப்பு மையத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாநில உரிமைகளுக்கு ஆபத்தா? தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையத்திற்கு வழங் கப்பட்டுள்ள மேற்கண்ட பல்வேறு அதிகாரங்கள், பொறுப்பற்ற முறையில் மாநிலங்களிடம் உள்ள அதிகாரத்தை ரத்து செய்யும் போக்கினை உருவாக்கக் கூடும் என 9 மாநில முதல் வர்கள் கூறியுள்ளனர். தற்போது மத்திய உள் துறை இணைச் செயலருக் கும், மாநில உள்துறைச் செய லாளருக்கும் வழங்கப்பட்டு உள்ள கைது மற்றும் பறி முதல் செய்யும் அதிகாரம், மேற்கண்ட மையத்தின் புலனாய்வு அதிகாரிகளுக்கு போய்விடும் நிலை ஏற்படும். இது கடும் ஆட்சேபத் திற்கு உரியது. தீவிரவாதத் தை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு பதிலாக தனிப்பட்ட காரணங்களுக் காக அதிகாரம் தவறாக பயன்படுத்தக்கூடும் என் றும் தமிழக முதல்வர் ஜெய லலிதா, பிரதமருக்கு எழுதி யுள்ள கடிதத்தில் கூறியுள் ளார். மேலும், மாநிலங்களுக்கு இடையே நுண்ணறிவு ஒத் துழைப்புக் குழுக்களை அமைப்பது மாநிலங்களின் சட்டப்பூர்வமான உரிமை களை பறித்துவிடும் என் றும் குறிப்பிட்டுள்ளார். பொது அமைதி மற்றும் காவல்துறை ஆகிய விஷயங் கள் மாநில அரசுகளின் பட் டியலில் உள்ளன. அப்படி இருக்கும்போது, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது போன்ற முக் கியத்துவம் வாய்ந்த நட வடிக்கைகளை எடுப்பது நியாயமில்லை. இது போன்ற சூழ்நிலையில் மாநி லங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என் றும் அவர் கூறியுள்ளார். நவீன் பட்நாயக் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தடுப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு என்பதில் அனைத்து மாநி லங்களும் பொறுப்பினை பகிர்ந்துகொள்ள வேண்டு மென்று மேற்குவங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதை நவீன் பட்நாயக் சுட்டிக்காட்டினார். மத்திய அரசும், மாநில அரசுகளும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று சிதம்பரம் கூறுகிறார். ஆனால் பயங்கரவாத தடுப்பு மையம் என்ற பெயரில் மாநில அரசுகளை கலந்தாலோசிக் காமல் மத்திய அரசு தன் னிச்சையாக செயல்படு கிறது. இது எப்படி பொறுப்பை பகிர்ந்து கொள்வதாகும் என்று நவீன் பட்நாயக் கேள்வி எழுப்பினார்.

Leave A Reply

%d bloggers like this: