புதுதில்லி, பிப்.18- 6 மாநிலங்களில் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் 11 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி யை தலைமைத் தேர்தல் ஆணையம், வியாழக்கிழமை அறி வித்தது. ஜம்மு- காஷ்மீர் மாநில மேலவை கவுன்சிலில் காலியாக ஒரு இடத்திற்கும் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டது. இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. மக்களவை தொகுதி – சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் மார்ச் 18ம் தேதியும், மேலவை கவுன்சில் இடைத்தேர்தல் மார்ச் 22ம் தேதியும் நடைபெறுகிறது. மார்ச் 21ம் தேதி மக்களவை -சட்டசபைத் தொகுதிகளுக் கான வாக்கு எண்ணிக்கையும், மாநில மேலவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மார்ச் 22ம் தேதி மாலை 3 மணிக்கும் நடைபெறுகிறது. இடைத் தேர்தல் தொகுதியாக உடுப்பி சிக்மகளூர் தொகுதி (கர்நாடகம்) உள்ளது. சதானந்த கவுடா எம்.பி. பதவியை ராஜினாமா செய்து முதல்வராக பொறுப்பேற்றதால் அந்த இடம் காலியானது. சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களாக மகப்பூப் நகர், நாகர் கர்னூல் கோவூர், கண்பூர் (ஸ்டேஷன் தனி), கோலாப்பூர், அடிலாபாத், கம ரெட்டி (ஆந்திரா), மான்சா (குஜராத்), பிரவம் (கேரளா), சங்கரன் கோவில் (தனித்தொகுதி) (தமிழ்நாடு), அத்கர் (ஒடிசா) ஆகியவை உள்ளன. மக்களவை – சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிக்கை பிப்ரவரி 22ம் தேதி வெளியிடப்படுகிறது. மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் பிப்ரவரி 29ம் தேதி. மனுக்களை திரும்பப் பெற மார்ச் 3ம் தேதி கடைசி நாள் ஆகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.