புதுதில்லி: சிறுபான்மையினர் உள் ஒதுக்கீடு குறித்து பிரச்சாரம் செய்த மத்திய உருக்குத்துறை அமைச்சர் பெனி பிரசாத் வர்மாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்குள் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா சிறுபான்மையினர் உள்ஒதுக்கீடு குறித்து பிரச்சாரம் செய்தது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனினும், சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா வாய் தவறிச் சொல்லி விட்டதாகக் கூறினார். பெனி பிரசாத் வர்மாவின் கருத்து களைத் தேர்தல் ஆணையம் மிகத் தீவிர மாக எடுத்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரூக்காபாத்தில் பிரச்சாரம் செய்த பெனி பிரசாத் வர்மாவின் பேச்சுகள் அடங்கிய வீடியோ பதிவுகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தீவிரமாக இறங்கியுள்ளது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. சல்மான் குர்ஷித்தைத் தொடர்ந்து சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு குறித்து பெனி பிரசாத் வர்மா பேசியது தற்செய லானதாக இருக்க முடியாது என்று அர சியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: