ஊழல் பணவீக்கம் தீவிர வாதம் – ஆசிரியர்: க. அபிராமி, வெளியீடு: தமிழ்ப் புத்தகால யம், 34, சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை-17. பக். 226 விலை: ரூ.120. நாட்டை உலுக்குகிற ஊழல், பண வீக்கம், தீவிரவாதம் ஆகிய மூன்று நோய்களை அபிராமி அலசியிருக்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும் மக்கள் லோக்பால் மசோதாவையும் இணைப்பாகத் தந்திருக்கிறார். 34 தலைப்புகளில் கொட்டை எழுத்துகளில் பல செய்திகளை தொகுத்துத் தந்திருப் பது நன்று. ஆயினும் இந்த வியாதிகளின் வேராய் இருக்கிற உலகமய, தாராள மய, பொருளாதாரக் கொள்கை குறித்தோ சமூக அமைப்பில் ஆழமாகி யுள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்தோ சரியான கோணத்தில் கவனத்தில் கொள்ளாமல் இந்தப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள இயலுமா? இதுவரை நடந்த முக்கிய ஊழல்களைப்பற்றிய தக வல்கள் இந்நூலில் இடம் பெற்றிருப்பது தெரிந்துகொள்ள உதவும். இந்தியாவில் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளது. அடுத்த நூலில் இப்பிரச்சனைகள் குறித்து மிக நுட்பமாகவும் ஆழமாகவும் ஆய்வார் கள் என நம்புகிறோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.