புதுச்சேரி, பிப். 18 – புதுச்சேரியில் மாநில அரசு பால்விலையை உயர்த்திய தற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும்கண்ட னம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி அரசு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.1 மட்டும் உயர்த்திவிட்டு விற்பனை யின் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி இருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மை யாக கண்டிக்கிறது. மாநிலத்தின் பால் தேவையோ 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர். ஆனால் உற்பத்தி செய்யப்படுவதோ 25 ஆயிரம் லிட்டர்தான். ஏன் இந்த நிலை என்பதை அரசு சிந்தித்து பார்க்க வேண்டும். பால் உற்பத்திக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை தவிடு, புண் ணாக்கு ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துவிட் டது. மாட்டுக்கு தேவை யான தீவனப்புல் போதுமான அளவு கிடைக்கவில்லை. அதற்கான ஏற்பாட்டை அரசு செய்யவில்லை. மானிய விலையில் கொடுக்கப்படும் மாட்டுத்தீவனத்தின் விலை யையும் பல மடங்கு உயர்த்தி விட்டது அரசு. மேலும், ரூ.10 ஆயிரத் திற்கு கிடைத்த பசு மாடு இப்போது ரூ. 25 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. இத் தகைய சூழ்நிலையில் பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செலவை ஈடுகட்டக்கூடிய அளவிற்கு கொள்முதல் விலை இல்லை. இதனால் தான் மாநிலத்தில் பால் உற்பத்தி குறைந்துவிட்டது. இதனால் பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருகி றார்கள். இதனை மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, மாட்டுத்தீவனத் திற்கு கூடுதல் மானியம் அளிக்காமல், தீவனப்புல் வளர்த்து கொடுக்கும் ஏற் பாடு செய்யாமல் உற்பத்தி செலவு கூடியுள்ள நிலையில் பாலுக்கு உரிய விலை கொடுக்காமல் மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக் கவே வழியில்லை. ஆகவே, வெளி மாநிலத்தை நம்பி தான் இருந்தாக வேண்டும். பான்லே நிறுவனத்தில் ஆட்சியாளர்கள் தேவைக்கு அதிகமாக வரன் முறையில் லாமல் ஆட்களை சேர்த்துள் ளனர். ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கையி னால் நட்டத்தை சந்தித்து வரும் பான்லே நிறுவனத்தை நிமிர்த்தப்போகிறோம் என்று பால் விற்பனை விலை யை உயர்த்தியது, பால் நுகர்வோரை ஏமாற்றும் செயலாகும். அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளை வஞ்சிப்பதோடு மட்டு மின்றி பால் நுகர்வோரை யும் ஏமாற்றியுள்ளது. அரசின் இந்த நடவ டிக்கை மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்க ஒரு போதும் உதவப்போவ தில்லை. இதை உணர்ந்து, உயர்த்தியுள்ள பால் விற் பனை விலையை அரசு மறு பரிசீலனை செய்ய வேண் டும். மாநிலத்திற்கு தேவை யான பால் உற்பத்தியை பெருக்கவும் பால் தட்டுப் பாட்டை போக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு பெருமாள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.