திருநெல்வேலி, பிப். 18 – பிப்ரவரி 28 ம் தேதி நடை பெறும் அகில இந்திய வே லை நிறுத்தத்தில் பங்கேற்ப தென உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுமுடிவு செய்துள்ளது. பாளை ராஜேந்திரநகர் சரோஜ் நினைவகத்தில் உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக் குழுவின் கூட் டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு சங்கமாவட்டஇணை அமைப்பாளர் சுப்புலட் சுமி தலைமை தாங்கினார். இணை அமைப்பாளர் கீதா வரவேற்றுப் பேசினார். மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.செண்பகம் வே லை அறிக்கையை சமர்ப் பித்தார். சிஐடியு மா வட்டச் செயலாளர் ஆர். மோகன் சிஐடியு மாநிலக்குழு முடிவு களையும் போராட்டத் தையும் விளக்கிக் கூறினார். சிஐடியு மற்றும் 11 முக் கிய சங்கங்கள் இணைந்து பிப்ரவரி 28 ம் தேதி நட த்தும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வது, வேலை நிறுத்தம் குறித்து மக்களி டம் விளக்குவது, நோட் டீஸ் விநியோகம் செய்வது, மார்ச் 8 சர்வதேசஉழைக்கும் மகளிர் தினத்தை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மார்ச் 10 ம் தேதி கலை நிகழ் ச்சிகளுடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட் டது. தாட்சாயிணி நன்றி கூறி னார். நிர்வாகிகள் சங்கரவ டிவு, சுப்புலட்சுமி, சீதா லெட்சுமி, சாலியா பீவி உட் பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: