சென்னை, பிப். 18 – உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழுவின் மாநிலக்குழு கூட்டம் கடந்த 14ம் தேதியன்று மாநில இணை அமைப்பா ளர் டி.ஏ.லதா தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு தமிழ் மாநில தலைவர் ஆர். சிங்காரவேலு பங்கேற்றார். கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக் கப்பட்டன. பிப்ரவரி 28, அன்று விலைவாசி உயர்வு, தொழி லாளர் சட்டங்கள், குறைந்த பட்ச ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை முன்வைத்து நடைபெறவுள்ள 14வது பொது வேலைநிறுத் தத்தில் மத்திய பொதுத் துறை, மாநில பொதுத்துறை, மத்திய- மாநில அரசு ஊழி யர், ஜவுளி, கார் மென்ட்ஸ் மற்றும் தனியார் நிறுவனங்க ளில் பணியாற்றும் அணி திரட்டப்பட்ட பெண் ஊழியர்களையும், கட்டுமானம், பீடி, கைத்தறி, தையல், வீட்டு வேலை செய் யும் பெண்கள், முறைசாரா அரங்கங்களில் பணியாற்றும் பெண் தொழி லாளர்களை யும் ஆயிரக் கணக்கில் பங்கேற்க வைக்க அனைத்து முயற்சி களையும் திட்ட மிட்டு செய்திட வேண்டும் என்று முடி வெடுக்கப்பட்டது. மார்ச் 8 சர்வதேச உழைக் கும் பெண்கள் தினத்தை யொட்டி சிஐடியுவுடன் இணைக் கப்பட்ட சங்கங் கள், மாநில சம்மேளனங் கள், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழுக்கள் இணைந்து குறைந்தபட்ச ஊதியம் ரூ.10,000, சமவேலைக்கு சம ஊதி யம், மகப்பேறு சலுகைகள், பணிநிரந்தரம், அங்கன்வாடி ஊழியர் பிரச்சனைகள், வீட்டுவேலை செய் யும் பெண்களுக்கான சட்டம், பணியிடங் களில் பாதுகாப்பு, பெண்களுக்கான சட் டம் இயற்றப்பட வேண்டும், 8 மணிநேர வேலை போன்ற கோரிக்கைகளை வலியு றுத்தி பேரணி, திறந்த வெளி கருத்தரங்கம், ஆர்ப்பாட் டம் நடத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. வீட்டு வேலை செய்யும் ஆயிரக்கணக் கான பெண்களை சிஐடியு தொழிற்சங்கத் தில் இணைக்க உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழு மாவட்ட கமிட்டி கள் பணியாற்ற வேண்டும். வெண்மணி நினைவாலய பணிகளை முடிக்க நிதி திரட்டும் பணியில் உழைக் கும் பெண்கள் மாவட்டக் குழுக்கள் சிஐடியு மாவட் டக்குழுக்களுக்கு உதவிட வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.