ஹிசார்: பாலில் யூரியா கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்று கண்டுபிடிக்கக்கூடிய கருவியை ஹிசார், லஜ்பத் ராய் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி உருவாக்கியுள்ளார். இக்கருவி மற்றும் தொழில்நுட்பத்திற்கான உரிம அங்கீகாரம் அளிக்கப்பட்டது. டாக்டர் குல்ஷன் நரங் உருவாக்கிய தொழில்நுட்பத்திற்கு இந்திய அரசு உரிம அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று கால்நடை பொதுசுகாதாரம் மற்றும் தொற்றுநோயியல் தலைவர் பி.கே. கபூர் தெரிவித்தார். இத்தொழில்நுட்பத்தின்படி, ஒரு வடிகட்டும் தாளில் ஒரு துளி ரசாயனத்தை இட்ட பின் அதனுடன் ஒரு துளி பாலைக் கலக்க வேண்டும். பாலில் யூரியா கலப்படம் செய்யப்பட்டிருந்தால் ஒரு நிமிடத்தில் மஞ்சள் நிறம் தோன்றும். இந்த முறை மிகவும் எளிமையானது மற்றும் விலை உயர்ந்த உபகரணங்கள் எதுவும் தேவை யில்லை என்று டாக்டர் குல்ஷன் நரங் தெரி வித்தார். இச்சோதனையை யாரும் எளிதில் செய்து விட முடியும் என்று அவர் குறிப் பிட்டார். இதற்கான உபகரணங்கள் கிசான் சேவா கேந்திராவில் கிடைக்கும் என்று நரங் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: