திருநெல்வேலி, பிப். 18 – நெல்லையில் அறிவிக் கப்படாத மின்வெட்டை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நெல்லை சந்திப்பு சிந் துபூந்துறையில் நடைபெற்ற இந்த நூதன ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் மாநகரச் செயலாளர் ஆர்.கருணாநிதி தலைமை தாங்கினார். மா வட்டச் செயலாளர் கே. ஜி.பாஸ்கரன் ஆர்ப்பாட்டத் தை துவக்கி வைத்துப் பேசி னார். மாநிலக் குழு உறுப் பினர் வீ.பழனி கண்டன உரையாற் றினார். முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொ.ஜெயராஜ், பி.தியாக ராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பிரபு, முத்து குமாரசாமி, வண்ணமுத்து, மனோகரன், சுடலைராஜ் மற்றும் மாநகரக் குழு உறு ப்பினர்கள் சுரேஷ், துரை ராஜ், ராஜகுரு, முருகன், குழந்தைவேலு, செந்தில் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தச்சநல்லூர் காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகரக் குழு உறுப் பினர் வி.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செய ற்குழு உறுப்பினர் பி.தியாக ராஜன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாநகரச் செயலாளர் ஆர்.கருணா நிதி நிறைவுரையாற்றினார். கட்சியின் மாநகரக் குழு உறுப்பினர்கள் சுரேஷ்,ராஜ குரு மற்றும் சிவசுப்பு, இச க்கி, தங்கவேல், ராமன், முருகன், வேம்பு, ஜெக நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

You must be logged in to post a comment.