ஜம்மு, பிப். 18- காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். ராம்பன் மாவட்டம், பந்தால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஸ்ரீநகரைச் சேர்ந்த வாகனத்தில் பயணம் செய்தவர்கள் சிக்கி உயிரிழந்தனர் என்று ராம்பன் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அனில் மங்கோத்ரா தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனே மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் அருகி லிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave A Reply