இஸ்ரேலிய சிறையில் உண்ணாரவிரதம் இருக்கும் காதர் அட்னானுக்கு ஆதரவு தெரிவித்து பாலஸ் தீனத்தின் காசா மற்றும் மேற்குக்கரைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம் நடத் தியுள்ளனர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் காதர் அட்னான், 33 வயதான இவர் மீது எந்தவிதக் குற்றமும் சுமத்தப்பட வில்லை. விசாரணையும் நடத்தவில்லை. இவரது சிறைப்பிடிப்பை நிர்வாக ரீதியான நடவடிக்கை என்று இஸ்ரேலிய அரசு கூறிவருகிறது. தன்னை சிறை யில் அடைத்திருப்பதை எதிர்த்து கடந்த இரண்டு மாத காலமாக காதர் அட்னான் சிறையிலேயே உண்ணாவிர தம் இருந்து வருகிறார். இப்போது அவருக்கு ஆதரவாக இஸ்ரேலின் பல சிறைகளில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக்கைதிகள் உண்ணாவிரதம் இருக்கத் துவங்கியுள்ளனர். காதர் அட்னானை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண் டும் என்று கோரி பாலஸ்தீனம் முழுவதும் ஆர்ப்பாட் டங்கள் நடந்துள்ளன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “நாங்கள் அனைவரும் காதர் அட்னான்தான்” என்று முழக்கமிட் டுள்ளனர். காசா பகுதியின் பிரதமரும், ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியே, காசா வில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். கூடியிருந்த மக்களிடம் உரையாற்றிய அவர், சிறையில் இருக்கும் நாயகர்களை பாலஸ்தீனத்தின் அனைத்து அமைப்பு களும் சேர்ந்து பாதுகாப்போம் என்று அறிவித்தார். இந்த ஆர்ப்பாட்டங்களிலும் பாலஸ்தீனத்தின் அனைத்து அமைப்புகளும் கைகோர்த்துள்ளன. ஜிகாத் இயக்கத்தைச் சேர்ந்த நாபிஸ் அஸ்ஸாம், தனிப்பட்ட பிரச்சனைக்காக அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. சிறையில் இருக்கும் ஆயிரக்கணக் கானவர்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தியே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக் கொண்டி ருக்கிறார் என்று கூறினார். இதேபோன்று மேற்குக் கரைப்பகுதிகளிலும் ஏராளமான இடங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடந்தன. இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை பற்றி பல்வேறு செய்திகள் வெளியா கியுள்ளன. 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை சிறைகளில் அடைபட்டிருக்கிறார்கள் என்று கூறப் படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: