மதுரை,பிப்.18- நாகையில் நடைபெறும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் ஏற்றப்படும் தியாகி லீலாவதி நினைவுக்கொடி மதுரையிலிருந்து சனிக்கிழமை யன்று எடுத்துச் செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் தமிழ்நாடு மாநில 20 வது மாநாடு நாகையில் நடைபெறு கிறது. இம்மாநாட்டில் வில்லாபுரம் வீராங்கனை லீலாவதி நினைவுக்கொடி ஏற்றப்படுகிறது. இதற்காக மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் இருந்து பயணமாகப் புறப்பட்டது. இந் நிகழ்ச்சிக்கு கட்சியின் மேலப் பொன்னகரம் பகுதிக்குழுச் செய லாளர் அ.ரமேஷ் தலைமை வகித் தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கொடியை பயணக்குழு தலைவர் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.நன்மாறன், சிவகங்கை மாவட் டச் செயலாளர் எம்.கந்தசாமி, எஸ்.கே. பொன் னுத்தாய்(மதுரை புறநகர்), கே.செல்வராஜ்(புதுக் கோட்டை) ஆகியோரிடம் எடுத் துத்தந்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநகர் மாவட்டச்செயலாளர் பா.விக்ரமன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. அண்ணாதுரை எம்.எல்.ஏ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் பா.மாரிசாமி, இ.எம்.ஜோசப், இரா.விஜயராஜன், பி.ராதா, இரா. லெனின், மா.கணேசன், அ.பிச்சை மணி, மா.செல்லம், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.மாயாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வை.ஸ்டாலின், ஆர்.ப்ரீதி, டிஒய்எப்ஐ விளை யாட்டுக்கழகத்தலைவர் பி.பாலுச் சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். செந்தொண்டர் அணிவகுப்பு நாகையில் நடைபெறும் மாநில மாநாட்டின் நிறைவாக பிப்ரவரி 25 ம் தேதி மாபெரும் பேரணியில் கலந்து கொள்ளும் மதுரை மாநகர் செந்தொண்டர்களின் பயிற்சி அணிவகுப்பு ஏ.ஏ.ரோடு கார்க்கி படிப்பகத்தில் இருந்து துவங்கி ஆரப்பாளையம் கிராஸ்ரோடு சென்றடைந்தது. மோதிலால் ரோடு அருகே செந்தொண்டர் அணிவகுப்பு மரியாதையை கட் சியின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: