நவ ஜவான் பாரத் சபா துவக்கம் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட இளைஞர் இயக் கம் – குறிப்பாக வங் காளம், பஞ்சாப், பம்பாய் ஆகிய மாநிலங்களில் வளர்ந்து வந்தது. கம்யூனிஸ்டுகளும் தொழிலாளர்கள்- விவசாயிகள் கட் சியின் முன்னணி ஊழியர்களும் இந்த இயக்கத்தில் தலையிட்டது ஒரு குறிப் பிடத்தக்க செயலாகும். சைமன் கமிஷன் புறக்கணிப்பு இயக்கத்தின் பின்னணியில் இது நடைபெற்றது. 1928ஆம் ஆண்டு ஜன வரி 29ஆம் தேதியன்று பம்பாயில் கூடிய தொழிலாளர்கள்-விவசாயி கள் கட்சியின் விரிவடைந்த செயற் குழுக் கூட்டத்தில் இளைஞர் அமைப்புகளை உருவாக்குவ தென்ற முடிவு முறையாக முதன்முதலில் எடுக்கப்பட்டது. 1928ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற பம்பாய் மற்றும் வங்காள மாகாணக் கட்சிகளின் மாநாடுகளின் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட் டது. கட்சியினால் ஏற்றுக் கொள் ளப்பட்ட செயல்பாட்டுக்கான ஆவணத்தில் இது குறித்து விரிவாக விளக்கப்பட்டது. “இந்தியாவில் உள்ள இளைய தலைமுறையினர் முன்னால் இரண்டு விதமான பாதை கள் உள்ளன. ஒன்று – பாரம்பரிய மான தூய்மையான தேசியப் பாதை யைப் பின்பற்றுவது. அதன் இன்றிய மையாத தொடர்ச்சியாக முதலாளித் துவ ஆதரவுக் கொள்கை அமையும். அதன் அடுத்த கட்டமாக ஏகாதிபத் தியத்தையும் அரசியல் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்தையும் ஆதரிக்க வேண்டியிருக்கும். மற்றொரு பாதை யைத் தேர்ந்தெடுப்பதானது – வர லாற்று ரீதியாக முற்போக்குத்தன்மை கொண்ட மக்கள் இயக்கத்தை ஆதரிப்பது; அதற்குப் பிரச்சனைகள் எழும்போது அதற்கு உதவி செய் வது; தேசிய சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதார மற்றும் கலாச்சாரத் திட்டங்கள் ஆகியவற்றின் முன்னேற் றத்துக்காகப் பாடுபடுவது – என்ற புதிய வகையில் அந்தப் பாதை அமைந்தி ருக்கும்”. புதிதாகத் திரண்டு வரும் இளை ஞர் பிரிவினரைத் தனது பதாகையை நோக்கி ஈர்ப்பதற்கு முயற்சி மேற் கொள்வதென தொழிலாளர்கள்- விவசாயிகளின் கட்சி தீர்மானித்தது. சுயேச்சையான இளைஞர் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. பாரம்பரியமான இளைஞர் அமைப் புகளில் இருக்கக்கூடிய சமூகத் தளத்தை விரிவுபடுத்தும் வகையில், தொழிலாளி வர்க்கம் மற்றும் விவ சாயி வர்க்கப் பிரிவினர் மத்தியிலி ருந்து இளைஞர்களைத் திரட்டவும் முடிவு செய்யப்பட்டது. அத்தகைய இளைஞர் அமைப் புக்காக ஆறு அம்சங்களை உள்ள டக்கிய செயல் திட்டமும் வகுக்கப் பட்டது. அவையாவன: ம் தேசிய அரசியல் இயக்கத் தில் பங்கேற்பு ம் இளம் தொழிலாளர்களைத் தொழிற்சங்க இயக்கத்துக்கு ஆதர வாகத் திரட்டுவது; அவர்களின் பணிநிலைகளை ஆய்வு செய்வது. ம் இளைஞர்களின் சிறப்புப் பிரச்சனைகளுக்காக – குறிப்பாக வேலையின்மையால் அவதிப்படும் இளைஞர்களின் பிரச்சனைகளுக் காகப் போராடுவது ம் அரசியல் கல்வி மற்றும் சுயமுயற்சி ம் தொழிலாளர்கள், கிராமவாசி கள், மாணவர்கள் ஆகியோருக்கு அரசியல் மற்றும் பொருளாதாரப் பாடங்களில் கல்வி அளிப்பது. ம் தற்போது செயல்பட்டு வரும் இளைஞர் அமைப்புகளுக்கிடையே ஒரு மையமான அமைப்பாக இருந்துகொண்டு முற்போக்கான கருத்துக்களையும் நல்ல கொள் கைகளையும் பிரச்சாரம் செய்வது. வங்காளத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி இதற்கான முன் முயற்சிகளை எடுத்தது. 1928ஆம் ஆண்டு ஜூலை இறுதியில் இளம் தோழர்களுக்கான லீக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் “திட்டம் மற்றும் கொள்கை அறிக்கை” ஆகஸ்டு மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இளை ஞர் அமைப்புக்கு வங்காள மொழி யில் “தருண்பந்து தள்” என்ற பெயர் சூட்டப்பட்டது. மிகக் குறுகிய காலத்திலேயே டாக்கா, பாரிசால், மைமன்சிங் ஆகிய மாவட்டங்களில் இளைஞர் அமைப்பின் கிளைகள் துவக்கப்பட்டன. இளைஞர்களைத் திரட்டும் பணியில் பிலிப் ஸ்பிராட், அப்துல் ஹலிம், தரணிகாந்த கோஸ் வாமி, அசுதோஷ்ராய், கோபன் சக்ரவர்த்தி ஆகியோர் தீவிரமான ஆர்வம் காட்டினர். இளைய தலை முறையைச் சேர்ந்தவர்களை, குறிப் பாக புரட்சிகர பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருந்தவர்களைத் தொழிலாளி வர்க்க அரசியலுக்குக் கொண்டுவர வேண்டும் என வங்கா ளத் தொழிலாளர்கள்-விவசாயிகள் கட்சி வலியுறுத்தியது. ஆனால் பம் பாய், பஞ்சாப் போன்ற இடங்களில் வேறுவிதமான சூழ்நிலை நிலவியது. 1928ஆம் ஆண்டு ஜனவரி இறுதி யில் பம்பாய மாகாண இளைஞர் லீகின் முதல் மாநாடு நடைபெற்றது. மிராஜ்கர், டாங்கே போன்றவர்கள் இந்த அமைப்பில் தீவிரமாகப் பங் கேற்றபோதிலும், அது மிதவாதக் கண்ணோட்டமுடைய அமைப்பா கவே இருந்தது. பம்பாய் இளைஞர் லீகின் இரண்டாவது மாநாடு 1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பூனா வில் நடைபெற்றது. இந்த மாநாட் டிற்கு கே.எப். நாரிமன் தலைமை வகித்தார். தேசிய காங்கிரஸ் மாநாட் டிற்கு முன்னர் 1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய இளை ஞர் காங்கிரஸ் மாநாட்டிற்கும் கே.எப். நாரிமன்தான் தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுபாஷ் சந்திரபோஸ் இம்மாநாட் டின் புரவலராகச் செயல்பட்டார். அதிகாரி பின்வருமாறு குறிப்பிடுகி றார். அக்காலத்தில் பம்பாயில் தங்க ளது சொந்த இளைஞர் அமைப்பைக் கட்டுவதிலோ இளைஞர் மாநாட்டு நிகழ்ச்சிகளிலோ பம்பாய் தொழி லாளர்கள் – விவசாயிகள் கட்சி குறிப் பிடத்தக்க பங்கு எதனையும் ஆற்றிய தாகத் தெரியவில்லை. ஜவுளித் தொழி லாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தத்திலும் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தபிறகு கிர்னி காம்கர் யூனியனின் (செங்கொடி) நடவடிக் கைகளிலும் தொழிலாளர்கள்-விவசா யிகள் கட்சி முழுமையாக ஈடுபட வேண்டியிருந்தது. மீரட் கைதுக ளுக்குப் பிறகு சூழ்நிலைகளில் மாற் றங்கள் ஏற்பட்டன. 1929ஆம் ஆண்டு இறுதியில் கம்யூனிஸ்டுகள் முன் முயற்சி எடுக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு இளம் தொழிலாளர்களின் லீக் அமைக்கப்பட்டது. பஞ்சாபில் தொழிலாளர்கள் -விவசாயிகள் கட்சியின் அமைப்பா ளர்களின் தீவிர முயற்சியால் 1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நவ்ஜவான் பாரத் சபா அமைக்கப்பட்டது. கேதர்நாத் செகால் தலைமை வகித்தார். சோகன் சிங் ஜோஷ் மற் றும் எம்.ஏ. மஜித் ஆகியோர் மாநாட் டில் கலந்துகொண்டனர். ஒரு விரி வான தளம் உள்ள அமைப்பாக நவ் ஜவான் சபா அமைக்கப்பட்ட தென் றாலும் தொழிலாளர்கள்-விவசாயி கள் கட்சியே அதற்கு வழிகாட்டும் அமைப்பாக இருந்தது. ( நன்றி : இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு. ஆரம்பகால ஆண்டுகள் 1920 -1933. தொகுதி. 1 )

Leave a Reply

You must be logged in to post a comment.