தூத்துக்குடி, பிப்.18- சங்கரன்கோவில் தொ குதி இடைத்தேர்தலையொ ட்டி தூத்துக்குடி மாவட் டத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப் பட்டு உள்ளதாக தூத்துக் குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்துள் ளார். இது குறித்து தூத்துக் குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் மேலும் கூறி யிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணை யம் சங்கரன்கோவில் சட்ட மன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவித்து உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள தொகுதியின் பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப் படுத்திட தேர்தல் ஆணை யம் அறிவித்து உள்ளது. அதன்படி கோவில்ப ட்டி தாலுகா இளையரச னேந்தல் குறுவட்டத்தின் 12 வருவாய் கிராமங்கள் சங் கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப் பட்டு உள்ளன. ஆகையால் இளையரச னேந்தல் குறுவட்டத்துக்கு உட்பட்ட 12 வருவாய் கிரா மங்கள் முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட தேர்தல் நடத் தை விதி மற்றும் நன்னடத் தை விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்தி பின் பற்றி நடத்திடவும், நேர்மை யான மற்றும் அமைதியான முறையில் இடைத்தேர் தலை நடத்திடவும் அனை த்து அரசியல் கட்சியினரும், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் தேர்தல் நடத் தை விதிகள் தூத்துக்குடி மா வட்டம் முழுவதும் நடை முறைக்கு வந்ததையடுத்து அனைத்து அரசு விழாக் களும் ரத்து செய்யப்படு கிறது. பிப்ரவரி 26-ந் தேதி நடைபெற இருந்த தூத்துக் குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்ட தொ டக்க விழா ஒத்திவைக்கப் படுகிறது. மேலும் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் திங் கட்கிழமை தோறும் நடை பெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மனுநீதி நாள் கூட்டம் ஆகியவை இந்திய தேர்தல் ஆணையத் தின் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.