தூத்துக்குடி, பிப்.18- கப்பர் பனாமக்ஸ்வகைக் கப்பல் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு முதன் முறையாக வந்துள்ளது. இதுகுறித்து துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் அ.சுப்பையா, கூறியிருப்ப தாவது:- வ.உ.சிதம்பரனார் துறை முகம் 12.8மீ மிதவை ஆழம் கொண்டது என்று 19.11.2011 அன்று அறிவிக்கப் பட்டதி லிருந்து 12.8மீ மிதவை ஆழம் உள்ள பனாமக்ஸ் வகைக் கப்பல்கள் தொ டர்ச் சியாக வந்து கொண்டிருக் கின்றன. இந்தமிதவைஆழத் திற்கு அதிகமாக வரும் கப் பல்கள் வெளிக் கடற்பரப் பில் நிறுத்தப்பட்டு 12.8மீ மிதவை ஆழம் வரும் வரை சரக்குகள் இறக்குமதி செய் யப்படுகின்றன. வ.உ.சிதம்பரனார் துறை முக வரலாற்றில் முதன் முறையாக 17.2.2012 அன்று 14.66மீ மிதவை ஆழம், 229 மீ நீளம், 32.26 மீ அகலம் மற்றும் 79,224டெட் வெ ய்ட் (னுறுகூ)உள்ள எம்.வீ நியு லெட் டோமி என்ற சூப்பர் பனாமக்ஸ் வகைக் கப்பல் இந்தோனேசியாவில் இருந்து 77,000 மெட்ரிக் டன் தொழிற்சாலை நிலக் கரியுடன் இந்த்-பாரத் பவர் ஜேன்காம் லிட் நிறுவனத் திற்காக வந்திருக்கிறது. இந்த கப்பலில் உள்ள சரக்கு 12.8மீ மிதவை ஆழம் வரும்வரை வெளிக் கடற் பரப்பில் இறக்குமதி செய் யப்படும். மெஸர்ஸ் ஸ்ரீ ரகு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் மெ ஸர்ஸ் ஆஸ்பின் வால் அன்ட் கம்பெனி முறையே இந்த கப்பலின் முகவர் மற் றும் ஸ்டிவோடர் ஆவார் கள். வ.உ.சிதம்பரனார் துறை முக பொறுப்புக் கழகத் தலைவர் அ.சுப்பையா, சூப் பர் பனாமக்ஸ் வகைக் கப்ப லை வ.உ.சிதம்பரனார்துறை முகவரவாற்றில்முதன்முறை யாக கொண்டு வர காரண மாகஇருந்தஅனைத்துதுறை முகஉபயோகிப்பாளர்களை பாரா ட்டியதுடன், வருங்கா லங்களில்துறைமுகவளர்ச்சி க்கு தூண்டுதலாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: