பெங்களூரு, பிப். 18 – வருமானத்திற்கு அதிக மாக சொத்து குவித்த வழக் கில் தொடர்புடைய சசி கலா நடராஜன், பெங் களூரு நீதிமன்றத்தில் சனிக் கிழமை ஆஜராகி, இந்த குற்றத்திற் கும் முதலமைச் சர் ஜெயலலிதாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார். பெங்களூரூ நீதிமன்றத் தில் நேரில் ஆஜரான சசி கலாவிடம், சனிக்கிழமை முதன்முறையாக கேள்வி கேட்கப்பட்டது. அப் போது, வங்கிக் கணக்கை நான் மட் டுமே இயக்கி வந் தேன். அதில் முதல மைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளி தான். ஆனால் அதைப் பற் றிய எந்த விவரமும் அவருக் குத் தெரியாது. அவர் குற்ற மற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசி கலா கண்ணீர் விட்டு அழு தார். 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு காலத்திற்குள் ஜெயலலிதா மற்றும் சசி கலா பேரில் சுமார் 66 கோடி ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது. வரு மானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்க்கப் பட்டது தொடர்பான வழக்கு பெங்களூரூ நீதிமன் றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், தமிழக முதலமைச் சர் ஜெயலலிதா வின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் அதி முகவில் இருந்து 2011, டிசம் பர் மாதம் நீக்கப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு முதல மைச்சர் ஜெயலலிதா தாக் கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.

Leave A Reply