சேலம், பிப்.18- தலித் பஞ்சாயத்து தலை வருக்கு மிரட்டல் விடுக் கப்பட்டதால் அவர் பாது காப்பு கேட்டு டி.ஆர். ஓ.விடம் மனு அளித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி யூனியனில் உள்ள வெள்ளாரி வெள்ளி பஞ்சாயத்து தலைவர் பி. வீரன், தலித் சமூகத்தை சேர்ந்த இவர் பஞ்சாயத்து தேர்தலில் தே.மு.தி.க சார் பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் இவர் சேலம் கலெக்டர் அலுவல கத்துக்கு தே.மு.தி.க சட்ட மன்ற உறுப்பினர் ஆர். பார்த்திபன் மற்றும் கட்சி தொண்டர்களுடன் வியா ழனன்று ஊர்வலமாக வந்து மாவட்ட வருவாய் அதி காரியிடம் (டி.ஆர்.ஓ) மனு ஒன்றினை அளித்தார். இதில் அவர் தெரிவித்திருப் பதாவது: அமைச்சர் எடப்பாடி பி. பழனிச்சாமிக்கு நெருக் கமான அவருடைய ஆதர வாளர்கள் என்னை அ.தி. மு.க.வில் சேரும்பாடி கட் டாயப்படுத்துகிறார்கள். நான் மறுத்ததால் சாதி யின் பெயரைச் சொல்லி என்னை இழிவுபடுத்தி மிரட்டுகி றார்கள். மேலும் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர். ஆகவே எனக்கு பாது காப்பு இல்லா நிலை ஏற் பட்டுள்ளது. எனவே எனக்கு பாது காப்பு அளிக்கும்படி கேட் டுக்கொள்கிறேன். இவ் வாறு அவரது மனுவில் கூறி யுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.