தூத்துக்குடி, பிப்.18- தமிழ் மொழியின் வயது 40 ஆயிரம் ஆண்டுகள் இரு க்கலாம் என்று தூத்துக் குடியில் நடந்த கருத்தரங் கில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குந ரும், உலகத்தமிழ் கல்வி இய க்கத்தின் மதிப்புறு இயக்கு நருமான ச.வே.சுப்பிரமணி யன் தெரிவித்தார். தூத்துக்குடி புனித மரி யன்னை கல்லூரி தமிழ்த் துறை, வரலாற்றுத் துறை சார்பில் “சமீப கால தொ ல்லியல் ஆய்வுகளின் பின் புலத்தில் சங்க இலக்கியங் கம்” என்னும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்த ரங்கம் கல்லூரியில் வியாழ னன்று தொடங்கியது. நிக ழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ச.டெக்லா தலைமை தாங் கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அ.ம.சோனல் வரவேற்றுப் பேசினார். பே ராசிரியர் தா.நீலகண்ட பிள்ளை பேசினார். சிறப்பு அழைப்பாளராக உலகத் தமிழ் ஆராய்ச்சி மைய முன் னாள் இயக்குநரும், உலகத் தமிழ் கல்வி இயக்கத்தின் மதிப்புறு இயக்குநருமான ச.வே.சுப்பிரமணியன் கல ந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசி னார். அப்போது அவர் கூறிய தாவது:- வரலாறு உணர்வுகளின் அடிப்படையில் எழுதப் படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப் பட வேண்டும். ஒரு சமூகத் தின் வரலாற்று பன்முகத் தை நமக்கு வெளிச்சம் போ ட்டு காட்டக் கூடியவை யாக இலக்கியம், கல்வெ ட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டவர் குறிப்புகள் அமைந்து உள்ளன. இந்த சான்றுகள் தமிழ்நாட்டில் சங்க காலத்துக்கு உரியவை யாக நமக்கு பல கிடைத்துள் ளன. உலகம் முழுவதும் வர லாற்று உணர்வு மிகவும் தே வை. ஒவ்வொரு நாட்டிலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கின்றன, எப்போது நடக்கின்றன, ஏன் நடக் கின்றன, அதன் சூழ்நிலை என்ன என்பது பற்றி தெரி ந்து கொள்வது மிகவும் அவ சியம். தமிழர்கள் வரலாற்று உணர்ச்சி குறைந்தவர்கள் என்பதை தொல்காப்பியம் சங்க, இலக்கியம் போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன. எழுத்து, சொல், பொ ருள் என்ற முப்பொருளை யும் கூறும் நூல் தொல்காப் பியம். எந்த வரலாற்று நிக ழ்ச்சிக்கும் புறச்சான்றுகள், அகச்சான்றுகள் என்ற இரு நிலைகளில் பார்க்கலாம். தமிழ் இலக்கியங்களின் வயது ஏறத்தாழ 10 முதல் 15 ஆயிரம் ஆண்டுகள் இருக்க லாம். அதன் அடிப்படை யில் பார்க்கும் போது தமிழ் மொழியின் வயது 40 ஆயி ரம் ஆண்டுகள் இருக்கலாம். தொல்காப்பியர் தற் போது வந்தால் அவர் எழு திய நூல்களை படிக்க முடி யாது. வரிவடிவம் மாற்றம் அடைந்து விட்டது. தொல் காப்பியம் எந்த வடிவில் எழுதப்பட்டு இருந்தாலும், தமிழில் வடிவங்கள் ஏராள மாக இருந்து இருக்க வேண் டும். இல்லையென்றால் தொல்காப்பியம் தோன்றி யிருக்க முடியாது. இன்று வரை தொல்காப்பியம் போ ன்ற ஒரு நூல் உலகில் தோ ன்றவில்லை. இவ்வாறு ச. வே.சுப்பிரமணியன் கூறி னார். கருத்தரங்கில் தொல் லியல் துறை முன்னாள் துணை இயக்குநர் மா.சந்திர மூர்த்தி, துணை கண்காணி ப்பு தொல்லியலாளர் நா. மார்க்சிய காந்தி, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேரா சிரியர் ராமநாதன், முன் னாள் தொல்லியல் துறை காப்பாட்சியர் வேதாச் சலம், கல்லூரி துணை முத ல்வர் எலிசபத் விஜிலி, செய லாளர் அல்போன்ஸ் ரோஸ் லின் மேரி, தேர்வு கட்டுப்பா ட்டு ஆணையர் ஜெஸ்ஸி பர்னாண்டோ மற்றும் ஏரா ளமான மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் வரலாற்றுத் துறை பேராசிரியர் ம.மேரி ஹெப்சிபாய் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடு களை கல்லூரி முதல்வர் தலைமையில் பேராசிரியை அமலஅருள் அரசி மற்றும் பேராசிரியைகள் செய்து இருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: