சென்னை, பிப். 18 – சிறுதாவூர் கிராமத்தில் அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முத லமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் முதலமைச் சருக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம், செங்கற்பட்டு வட்டம், சிறுதாவூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு 1967ம் ஆண்டு நிலமற்ற 20 ஏழை குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலமும், 10 சென்ட் மனைப் பட்டாவும் வழங்கியது. காலப்போக் கில் இந்த நிலம் செல்வாக்கு மிக்கவர்களால் அபகரிக்கப் பட்டது. இது குறித்து, 2006 ஜூலை மாதம் அப்போ தைய முதலமைச்சரிடம் நேரில் புகார் அளிக்கப்பட் டது. இந்தப் புகார் மனு வினை ஏற்று நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியன் தலை மையில் கமிஷன் அமைக் கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசா ரணைக் கமிஷன் தனது அறிக்கையை 2010 மார்ச் மாதம் அரசிடம் அளித்தது. அறிக்கையை பெற்ற திமுக அரசு, விசாரணை கமிஷனின் பரிந்துரைகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி விட்டது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச் சரை நேரில் சந்தித்து வற் புறுத்திய பிறகும் நடவடிக் கை இல்லை. சிவசுப்பிரமணியன் கமி ஷன், சிறுதாவூரில் அமைந் துள்ள சொகுசு பங்களா வுக்கு அருகில் 1967ம் ஆண்டு தலித் மற்றும் நில மற்ற ஏழைகளுக்கு வழங்கப் பட்ட 53 ஏக்கர் நிலம் அர சியல் செல்வாக்குள்ளவர் களால் பறிக்கப்பட்டுள் ளது. மேற்படி நிலத்தை மீட்டு, அந்த கிராமத்தில் உள்ள நிலமற்றவர்களுக்கு வழங்கிடலாம் என சிபாரிசு செய்துள்ளது. இதே பங்களாவின் காம்பவுண்டுக்குள் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 32 ஏக்கர் உள்ளதாகவும் அந்த நிலத்தை மீட்பதற்கான நட வடிக்கையை அரசு மேற் கொள்ளும் என்றும் அதிகாரி கள் விசாரணை கமிஷன் முன்பு உறுதி அளித்தார்கள். சித்ரா அவர்களுடைய வழக் கறிஞரே, பங்களா வளாகத் திற்குள் அரசு புறம்போக்கு நிலம் உள்ளதை ஏற்றுக் கொண்டதுடன், நில ஆக் கிரமிப்புச் சட்டப்படி நட வடிக்கை எடுக்க ஆட்சேப ணை இல்லை என கமிஷன் முன்பு தெரிவித்ததை தங்க ளின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். எனவே, மேற்கண்ட இரண்டு வகையான நிலங் களையும் மீட்டு, சிறுதாவூர் கிராமத்தில் உள்ள தாழ்த்தப் பட்ட மற்றும் நிலமற்ற ஏழைகள் அனைவருக்கும் வழங்குவதுடன், ஏற்கென வே நிலத்தை இழந்த 20 பயனாளிகளுக்கும் சேர்த்து நிலத்தை வழங்கிட அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

Leave A Reply

%d bloggers like this: