நாகப்பட்டினம், பிப். 18 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில 20வது மாநாடு, பிப்ரவரி 22 முதல் 25 வரை நாகை நகரில் நடைபெறுகிறது. இதை யொட்டி, கட்சி, செங்கொடி இயக்கங் களின் மாபெரும் வரலாற்றுப் படக் கண்காட்சி அமைக்கப்படுகிறது. பல புத்தக நிலையங்கள் திறக்கப்படுகின் றன. 20வது மாநில மாநாட்டைக் குறிக்கும் வண்ணம் 20 செங்கொடிகள் ஏற்றப்படுகின்றன. 20 செங்கொடிகள் மாநில மாநாட்டின் துவக்க நாளான பிப்ரவரி 22 புதன்கிழமை காலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான 20வது மாநில மாநாடு நாகையில் துவங்குவதைக் குறிக்கும் வண்ணம், நாகை அபிராமி திருவாசல் முன்பாக 20 செங்கொடி களைத் தலைவர்கள் ஏற்றி வைக்கிறார்கள். இயக்க வரலாற்றுப் படக்கண்காட்சி அன்று காலை, நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கட்சி, செங்கொடி இயக்கங்களின் உன்னத மான வரலாற்றுக் கண்காட்சி திறக்கப் படுகிறது. ‘ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று பாரதி வியந்து பாடிய ரஷ்யப் புரட்சி நடைபெற்ற 1917ம் ஆண்டு முதல், செங்கொடி இயக்க வரலாற்று நிகழ்ச்சிகள், அரி தான படங்கள், 1964 வரை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திர நிகழ்வுகள், 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உதயம் முதல் தற் போதைய காலம் வரை-ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்த வரலாற்றுப்பதிவு கள், அவற்றின் படங்கள், தேசம்-மக்க ளுக்காக நடைபெற்ற போராட்ட வர லாற்றுச் சுவடுகள்-அரிய படங்கள் கண்காட்சியில் அமைகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதல் மாநில மாநாடு முதல் தற் போதைய 20வது மாநில மாநாடு வரை யிலான காண்பதற்கரிய சரித்திரக் காட்சி கள்-படங்கள், முதல் மாநிலச் செயலா ளர் எம்.ஆர்.வெங்கட்ராமன் முதல் தற்போதைய மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வரை அனைத்து மாநிலச் செயலாளர்களின் படங்கள், குறிப்புகள், இயக்க தியாகிகளின் அரிய படங்கள், நிகழ்வுக்குறிப்புகள் இடம் பெறுகின்றன. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டங்கள், அவற்றின் வெற்றி வரலாறுகள் அடங் கிய 120 டிஜிட்டல் தட்டிகள், வெண் மணி, திருமெய்ஞானம், சின்னியம்பா ளையம், சேலம் சிறை, மதுரை லீலா வதி உள்ளிட்ட பல தியாகிகள் நினை விடத்துப்படங்கள், வரலாற்றுக் குறிப் புகள், வாச்சாத்தி பிரச்சனை துவங்கி யது முதல் தீர்ப்பு வெளியானது வரை நடைபெற்ற போராட்டங்கள், வெற்றி வரலாறுகள், படங்கள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இந்த வரலாற்றுப் படக்கண் காட்சி, காண்போரை ஈர்த்து வியக்க வைக்கும் ஓர் அற்புதமான வரலாற்றுப் பொக்கிஷமாகும். புத்தகக் கண்காட்சிகள் மாநில மாநாட்டையொட்டி நாகையில் பாரதி புத்தகாலயம், வசந் தம், அலைகள் உள்ளிட்ட பல வெளி யீட்டு நிறுவனங்களின் தேடுதற்கரிய பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் கண் காட்சியாகவும் விற்பனைக்காக வும் கடைவிரிக்கப்படுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: