நாகப்பட்டினம், பிப்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 20வது மாநாடு, பிப்ரவரி 22 முதல் 25 வரை நாகையில் நடப்பதை முன்னிட்டு, பிப்ரவரி 14, 17 ஆகிய இரு நாட்களில் பொதுமக்களை மாநாட்டை நோக்கி ஈர்க்கும்வண்ணம் நாகை மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்க்கூட்டங்கள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை பிற்பகல், நாகை வட்டம், அகர ஒரத்தூர் கடைவீதியில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திலும், அன்று மாலை கீழையூரில் நடந்த சிறப்புக் கூட்டத்திலும் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் ஏ.வி.முருகையன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இரு நாட்களில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஊர்க்கூட்டங்களில் கலந்துகொண்டு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் மாநிலக்குழு உறுப்பினருமான வி.மாரிமுத்து பிரச்சாரம் செய்தார். அகர ஒரத்தூர் மற்றும் கீழையூரில் நடந்த சிறப்புக் கூட்டங்களில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, மாநில மாநாட்டின் மகத்துவம் பற்றியும் சிறப்பு அம்சங்களை விளக்கியும் சிறப்புரையாற் றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.